நாமக்கல்லிலிருந்து ஏறத்தாழ 51கி.மீ
தொலைவிலும், சேந்தமங்கலத்திலிருந்து ஏறத்தாழ 40கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள இடம்
தான் சீக்குப்பாறை ஆகும்.
சிறப்புகள் :
அமைதியான
சூழலில் மாசில்லாத சுற்றுச்சூழலும், குறைவான மக்கள் கூட்டமும் இருப்பதால்
சீக்குப்பாறையில் இருக்கும் இடங்கள் நமக்கு ரம்மியமாக காட்சியளிக்கும்.
சீக்குப்பாறை
மற்றும் சேலூர் நாடு ஆகிய இடங்களில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக மலை
காட்சிக் கோணங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள
மலைகளின் அழகான காட்சிகளை சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு சீக்குப்பாறை மற்றும்
சேலூர் நாடு ஆகிய இடங்களில் வியூ பாயின்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும்
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக மலையேற்றம், படகுசவாரி போன்ற பொழுதுபோக்கு
அம்சங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இங்கிருந்து
சிறிது தூரம் சென்றால் அன்னாசிப்பழம் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. அங்கு
பலவகையான உயர்ரக அன்னாசிப் பழங்கள் உருவாக்கப்பட்டு தமிழக அரசால் பாதுகாத்து
வருகிறார்கள்.
சுற்றுலாப்
பயணிகளை ஈர்க்கும் இடங்களாக ஆகாய கங்கை அருவி மற்றும் மாசிலா அருவி போன்ற
இடங்களும் உள்ளன.
மருத்துவ
குணம் கொண்ட மூலிகை செடிகளும் இந்த மலைப்பகுதியில் அதிக அளவில் இருக்கின்றன.
எப்படிச் செல்வது?
நாமக்கல்
மற்றும் சேந்தமங்கலத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்துக்
காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
நாமக்கலில்
பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
பார்க்க வேண்டிய இடங்கள் :
வியூ
பாயின்ட்.
மலைக்
காட்சி கோணங்கள்.
படகு
சவாரி.
அன்னாசிப்பழம்
ஆராய்ச்சி மையம்.
ஆகாய
கங்கை அருவி.
மாசிலா
அருவி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக