Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 27 ஜனவரி, 2020

ஏர் இந்தியாவின் மொத்த பங்குகளும் விற்பனை! மத்திய அரசு முடிவு!

air india 

ந்திய பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் மொத்த பங்குகளையும் தனியாருக்கு விற்க போவதாக மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

நஷ்டத்தில் இயங்கிவரும் அரசு பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் பங்குகளை தனியாருக்கு விற்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்தது. கடந்த ஆண்டு இதற்கான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டபோது எந்த நிறுவனமும் வாங்க ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் மீண்டும் மத்தியில் பதவியேற்றுள்ள பாஜக இந்த முறை ஏர் இந்தியாவின் பங்குகளை விற்று விடுவதில் மும்முரமாக இருக்கிறது. இதற்கென அமைச்சர்கள் குழுவும் அமைக்கப்பட்டது.

அதில் 90 சதவீதம் பங்குகளை தனியாருக்கு விற்பதென்றும் மீத 10 சதவீதத்தை மத்திய அரசு நிர்வகிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்ததாரர்கள் ஏர் இந்தியாவின் கடன் சுமை குறித்து அதிகம் யோசிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் தனியாருக்கு விற்பதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் ஏர் இந்தியா நிறுவனம் முழுவதுமாக தனியார் நிறுவனமாக மாற உள்ளது. அதிகமான பங்குகளை அல்லது முழு பங்குகளையும் எந்த நிறுவனம் பெறுகிறதோ அதை பொருத்து ஏர் இந்தியாவின் எதிர்காலமும் அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக