சரவணா ஸ்டோர் என்றாலே சிறிய குழந்தை முதல்
பெரியவர் வரை அனைவரும் அறிந்த கடை தான்.
அதிலும் காலில் அணியும் செருப்பு முதல்
கொண்டு, குழந்தைகள் சாப்பிடும் உணவு முதல் மக்கள் அணியும் தங்க ஆபரணம் வரை
அனைத்தும் சரவணா ஸ்டோரில் கிடைக்கும்.
சென்னை தி நகர் என்றாலே நம்மில்
பலருக்கு நினைவுக்கு வருவது சரவணா ஸ்டோர்ஸ் தான். சரி இப்படி ஒரு புகழ்பெற்ற
நிறுவனத்திற்கு எதற்காக கேவிபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது, வாருங்கள் பார்க்கலாம்.
சாம்ராஜியம்
சிறிய அளவில் மிக வறுமையான
குடும்பத்தில் பிறந்த அண்ணாச்சி பிறப்பில் மிக ஏழ்மையானவர் தானாம். மிகச்சிறிய
அளவில் வணிகத்தை தொடங்கி இன்று பிரண்டமாய் வளர்ந்திருக்கும் நிலையில், நுகர்வோர்
பொருட்களின் விற்பனை உலகில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவி அதன் மூலம்
ஆயிரக்கணக்கானவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கேவிபி
நோட்டீஸ்
கடின உழைப்பும், அசராத நம்பிக்கையும்
இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம் தான் சரவணா ஸ்டோர்ஸ்.
இப்படி ஒரு நிலையில் சரவணா ஸ்டோர் நிறுவனமா இப்படி செய்துள்ளது என்றால் நம்ப
முடியவில்லை. ஆனால் இது உண்மைதான். சென்னை சரவணா ஸ்டோர் நிறுவனம் வாங்கிய கடனை
சரியான நேரத்தில் கட்டாததால் கரூர் வைஸ்யா பேங்க் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
மொத்தம்
எவ்வளவு கடன்?
சரவணா ஸ்டோர்ஸ் கடையின்
விளம்பராதார்கள் மற்று சரவணா ஸ்டோர்ஸ் தங்க மாளிகை மற்றும் அதன் புரோமோட்டார்கள்
கருர் வைஸ்யா வங்கியிலிருந்து 162.80 கோடி ரூபாய் கடன் பெற்றுக் கொண்டு, இன்னும்
திருப்பி செலுத்தவில்லை என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது.
யார்
யாருக்கு நோட்டீஸ்?
இந்த நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு
பேலஸ் லிமிடெட் மற்றும் அதன் உரிமையாளர்களான பல்லாகு துரை, சுஜாதா மற்றும் ஷிரவன்
உள்ளிட்டவர்களுக்கு கரூர் வைஸ்யா வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த
நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள படியான தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்துமாறும்
கேவிபி தெரிவித்துள்ளது.
சொத்துகளை
கையகப்படுத்தலாம்
நோட்டீஸில் கூறியது போல் கடனை
குறிப்பிட்டது போல் குறிப்பிட்ட தேதிக்குள் கடனை திரும்ப செலுத்தாவிட்டால்,
சொத்துகள் கையகப்படுத்தப்படும் என்றும் கேவிபி எச்சரித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக