வாட்ஸ்அப் நிறுவனம் ஒருவழியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டார்க்
தீம் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவையின் பயன்பாட்டை ஆண்ட்ராய்டு
தளத்தில் மட்டும் வாட்ஸ்அப் நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளது. புதிய டார்க்
தீம் சேவையை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
வாட்ஸ்அப் டார்க் தீம் சேவை
வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள
இந்த புதிய டார்க் தீம் சேவை தற்பொழுது புதுப்பிக்கப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு
v2.20.13 பீட்டா வெர்ஷனில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய வாட்ஸ்அப் பீட்டா
அப்டேட்டை, உங்கள் போனில் அப்டேட் செய்த பின் இந்த சேவையை உங்களால் பயன்படுத்த
முடியும். கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை வெளியிட்டபின் இந்த சேவை
தற்பொழுது ஆண்ட்ராய்டு பயனர்களுக்குக் கிடைத்துள்ளது.
வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு
மட்டும்
கூகிள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 10
சேவையை அறிவித்ததிலிருந்தே டார்க் தீம் அம்சத்தில் வாட்ஸ்அப் தீவிரம்
காட்டிவருகிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு
மட்டுமே இந்த அம்சம் தற்பொழுது கிடைக்கிறது. வாட்ஸ்அப்பின் அனைத்து பயனர்களுக்கும்
பீட்டா வெர்ஷன் சோதனைக்குப் பின்னர் வரும் வாரங்கள் அல்லது மாதங்களில்
வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி டார்க் தீம் ஆக்டிவேட்
செய்வது?
வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள
இந்த டார்க் தீம் சேவையை மிகவும் எளிதான முறையில் இயக்கலாம். இதற்கு வாட்ஸ்அப்
பீட்டா பயனர்கள் தங்கள் பயன்பாட்டின் வலது மேல் மூலையில் உள்ள மூன்று-புள்ளி ஐகானை
அழுத்தவும், அதற்குப் பின் செட்டிங்ஸ் கிளிக் செய்து > சாட்ஸ் கிளிக் செய்து
> தீம் கிளிக் செய்யவும் > இங்கு வழங்கப்பட்டுள்ள மூன்று டார்க் தீம்
தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
டார்க் தீம் கீழ் உள்ள மூன்று
விருப்பங்கள்
- டார்க் தீம் சேவைக்கு கீழ் வாட்ஸ்அப் பேட்டரி சேவர், லைட் மற்றும் டார்க் ஆகிய மூன்று விருப்பங்களை வாட்ஸ்அப் சேர்த்துள்ளது.
- நீங்கள் டார்க் விருப்பத்தை கிளிக் செய்தால் ஒட்டுமொத்த பயன்பாடும் டார்க் ஆகிவிடும்.
புதிய பேட்டரி சேவர் விருப்பம்
- லைட் தீம் என்பது வாட்ஸ்அப் முன்பு வழங்கிய சேவைகளில் ஒன்றாகும், எனவே அதில் மாற்றங்கள் எதுவும் இல்லை.
- பேட்டரி சேவர் விருப்பத்தைப் பொறுத்தவரை, இது உங்கள் ஸ்மார்ட்போனின் தற்போதைய பேட்டரி ஆயுள் அடிப்படையில் டார்க் தீம் செயல்பாட்டைச் செயல்படுத்துகிறது.
iOS பயனர்களுக்கான டார்க் தீம்
எப்பொழுது வெளியிடப்படும்?
டார்க் தீம் தற்போது ஆண்ட்ராய்டு
பீட்டா v2.20.13 வெர்ஷன் மற்றும் அதற்கு மேற்பட்ட வெர்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.
iOS பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் இந்த டார்க் தீம் அம்சத்தைப்
பயன்படுத்துவதற்கு இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். ஆனால் iOS பயனர்களுக்கான
வெளியீடு நிலையான சேனலில் நேரடியாக நடக்கும் என்பது ஒரு நல்ல விஷயமாக
பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக