புலியிடம் தனியாக சிக்கிய நபர் புத்திசாலித்தனமாக
நடித்து அதனிடம் இருந்து தப்பித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பந்தாரா மாவட்டத்தின் வனப்பகுதியில் இருந்து புலி ஒன்று தப்பித்து அருகில் உள்ள கிராமம் ஒன்றில் உலாவ ஆரம்பித்தது. தனியாக அப்படி சுற்றியலைந்த புலியைப் பார்த்து பயந்த மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி அதைப் பயமுறுத்தி விரட்டப் பார்த்தனர்.
அப்படி சுற்றிக் கொண்டிருந்த அந்த புலியிடம் தனியாக ஒரு மனிதர் சிக்கிக் கொண்டார். ஆனால் அந்த புலியிடம் இருந்து தப்பிப்பதற்காக புத்திசாலித்தனமாக இறந்தவர் போல அப்படியே படுத்துக் கிடந்தார். இதனால் அவர் இறந்துவிட்டார் என நினைத்த புலி அவரையே சுற்றி வந்தது. சிறிது நேரத்தில் புலி மக்களின் சத்தத்தால் பயந்து ஓட ஆரம்பித்தது. அதனையடுத்து மக்கள் அந்த புலியை விரட்டியடித்தனர். இது சம்மந்தமான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக