Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 3 ஜனவரி, 2020

முரசொலி சிக்கலில் இருந்து நேக்காய் நழுவிய ஸ்டாலின்!!



முரசொலி நில விவகாரம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் முன்பு ஆஜராவதிலிருந்து ஸ்டாலினுக்கு விலக்கு அளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். 

அசுரன் படத்தை பாராட்டிய ஸ்டாலின், அதன் பின்னர் முரசொலி விவகாரத்தில் சிக்கிக்கொண்டார். முரசொலி நிலம் பஞ்சமி நிலம் என ராமதாஸ் கூற, அதனைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்தில் தமிழக பாஜக செயலாளர் ஆர் ஸ்ரீனிவாசன் இது குறித்து புகார் அளித்த்திருந்தார்.  
 
இந்த புகாரின் அடிப்படையில் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருகிறதா என தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக ஸ்டாலினை வரும் 7 ஆம் தேதி ஆஜராகும்படி நோட்டிஸ் அனுப்பியது. 
 
இதனையடுத்து திமுக தரப்பில் இந்த விசாரணைக்கு தடை கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. முரசொலி பஞ்சமி நில விவகாரத்தை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரிக்க கூடாது என தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மனுத்தாக்கல் செய்தது. இந்த விவகாரத்தை தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரிக்க அதிகாரம் இல்லை எனவும் திமுக தரப்பு குறிப்பிடப்பட்டது. 
 
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், முரசொலி பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் முன்பு ஆஜராவதிலிருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். மேலும், பிரதிநிதி மூலமாக ஆஜராகிக்கொள்ளலாம் என்ற அனுமதியும் ஸ்டாலினுக்கு வழங்கியுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக