Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 21 ஜனவரி, 2020

ஈராக்கில் பரபரப்பு.! அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்.!

ஈராக்கில்  பரபரப்பு.! அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்.!


ராக் தலைநகர் பாக்தாத்தில் பசுமை மண்டல பகுதியில்  உள்ள அமெரிக்க தூதரகம் அருகே இன்று மூன்று ஏவுகணைகள் திடீரென வந்து விழுந்தன. இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து  தகவல் வெளியாகவில்லை.இந்த ஏவுகணை தாக்குதலுக்கு பின்னர் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதலை ஈரான் ஆதரவு பெற்ற துணை ராணுவ படை குழுக்கள் நடத்தி இருப்பதாக அமெரிக்கா குற்றச்சாட்டி உள்ளது. சமீப காலங்களாக பசுமை மண்டல பகுதியில் இதுபோன்ற தாக்குதல்களை இந்த குழுவினர் தான்  நடத்தியுள்ளனர் என கூறியுள்ளது.

ஆனால் இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அமெரிக்கா , ஈரான் இடையே ஏற்கனேவே பதட்டமான சூழ்நிலை உள்ள நிலையில் தற்போது நடந்து  உள்ள இந்த ஏவுகணை தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!