புதுச்சேரி சிறையில் இருந்தபடியே ஆளுநர் மாளிகை மற்றும்
ரயில் நிலையத்திற்கு கைதி ஒருவர் வெடிக்குண்டு மிரட்டம் விடுத்துள்ள சம்பவம்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி ஆளுநர் மாளிகை மற்றும் ரயில் நிலையத்தில் வெடிக்குண்டு வைத்திருப்பதாக மர்ம நபரிடமிருந்து புதுச்சேரி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் போன் கால் வந்துள்ளது. உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய புதுச்சேரி போலீஸார் ஆளுநர் மாளிகை மற்றும் ரயில் நிலையத்தில் சோதனைகள் மேற்கொண்டனர். வெடிக்குண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெடிக்குண்டுகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் போன் கால் எங்கிருந்து வந்தது என்பதை ஆய்வு செய்தபோது காலாப்பட்டு மத்திய சிறையிலிருந்து அந்த அழைப்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கார் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நித்திஷ்குமார் என்பவர்தான் கால் செய்தார் என்பதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மற்ற கைதிகளிடமும் நடத்திய சோதனையில் ஏராளமான செல்போன்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிறை அதிகாரிகளை மீறி கைதிகளுக்கு செல்போன் எப்படி கிடைத்தது? இதில் சிறை அதிகாரிகளும் உடந்தையா? என்பது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக