உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போன்
பயன்படுத்தி வருகின்றனர். இதில் பலரும் விலை உயர்ந்த அதிநவீன ஸ்மார்ட்போனகளை
பயன்படுத்தும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். அதிகரித்த ஸ்மார்ட்போன் பயன்பாடு
பழக்கம், ஸ்மார்ட்போன்களின் திருட்டுகளையும் அதிகமாக்கியுள்ளது.
சென்ட்ரல்
எக்குய்ப்மென்ட் ஐடென்டிட்டி ரெஜிஸ்டர்
திருடு போன ஸ்மார்ட்போன் பற்றிய
தகவல்களைக் கொண்டு காவல்துறையில் முதலில் புகார் அளிக்கப்பட வேண்டும். அதற்குப்
பின் அந்தப் புகார் படிவத்துடன் சென்ட்ரல் எக்குய்ப்மென்ட் ஐடென்டிட்டி ரெஜிஸ்டர்
(Central Equipment Identity Register) என்ற அரசின் இணையதளத்திற்குச் சென்று
வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
பிளாக் மற்றும் அன்பிளாக் செய்துகொள்ளலாம்
அரசு
அறிமுகம் செய்துள்ள இந்த சென்ட்ரல் எக்குய்ப்மென்ட் ஐடென்டிட்டி ரெஜிஸ்டர்
வலைத்தளம் மூலம் தொலைந்து போன உங்களுடைய ஸ்மார்ட்போனை, நீங்களே ட்ராக்
செய்துகொள்ளலாம். அதை மற்றவர்கள் பயன்படுத்தாமல் பிளாக் மற்றும் அன்பிளாக்
செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தொலைத்
தொடர்பு அமைச்சகம்
இந்தியத்
தொலைத் தொடர்பு அமைச்சகம் முதல் முறையாக இந்த புதிய முயற்சியுடன் முன் வந்துள்ளது.
தொலைந்த அல்லது திருடு போன ஸ்மார்ட்போன்களை அரசின் வலைத்தளம் மூலம் ட்ராக்
செய்துகொள்ளலாம் என முன்பே அறிவித்திருந்தது. ஆனால் இவற்றை நடைமுறைப்படுத்தாமல்
தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் அமைதி காத்து வந்தது.
காவல்நிலைய படிவம்
மற்றும் உங்கள் அடையாள அட்டை அவசியம்
ஆனால்,
தற்பொழுது இந்தத் திட்டத்தை டெல்லியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி தற்போது
டெல்லியில் உள்ள மக்கள் அரசின் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தித் திருடப்பட்ட ஸ்மார்ட்போன்
பற்றிய தகவலை அறிந்துகொள்ளலாம். காவல்நிலைய படிவம் மற்றும் உங்கள் அடையாள
அட்டையைச் சேர்த்து பதிவேற்றம் செய்து தொலைந்த ஸ்மார்ட்போனை நீங்களே ப்ளாக் அல்லது
அன்ப்ளாக் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
IMEI நம்பர் விபரம்
மற்றும் பல விபரங்கள் தேவை
திருடப்பட்ட
ஸ்மார்ட்போனின் IMEI நம்பர் விபரம், உங்களுடைய மொபைல் எண், ஸ்மார்ட்போன் தொலைந்த
இடம், ஸ்மார்ட்போன் தொலைந்த தேதி, காவல்துறை புகார் படிவம் மற்றும் உங்கள் அடையாள
அட்டை விபரம் போன்ற தகவல்களை அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். பிறகு
உங்கள் தொலைந்த போன் எங்குள்ளது என்று ட்ராக் செய்துகொள்ள முடியும்.
தொலைந்த போனின் லைவ்
லொகேஷன்
இம்முற்றைப்படி
உங்கள் ஸ்மார்ட்போனை திருடியவர் எந்த வகையிலும், உங்கள் தகவல்களை திருடாமல்,
உங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தாமல் தடுக்க முடியும். மேலும், உங்கள் தொலைந்த
ஸ்மார்ட்போனின் லைவ் லொகேஷன் எங்குள்ளது என்றும் உங்களால் ட்ராக் செய்யவும்
முடியும்.
விரைவில் இந்தியா
முழுதும்
தற்போது
டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் மட்டும் இந்த வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கூடிய விரைவில் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக