Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 28 ஜனவரி, 2020

தமிழ், சமஸ்கிரதம்; இரு மொழிகளிலும் குடமுழுக்கு..

ஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிரதம் ஆகிய இரு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தவேண்டும் என தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தினர். ஆனால் பல்லாண்டு காலமாக  பின்பற்றி வரும் ஆகம விதிகளின்படி குடமுழுக்கு செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்தது.

இதனை தொடர்ந்து தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் தஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சமஸ்கிரதம் ஆகிய இரு மொழிகளிலும் குடமுழுக்கு விழா நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் பிப்ரவரி 5 ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்படும் எனவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை கூறியுள்ளது. இந்து அறநிலையத்துறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக