திமுக சொல்லி
பெண்கள் கோலம் போட்டால் குடும்பம் அலங்கோலமாகி விடும் என பாஜகவின்
பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலம் போட்ட பெண்களை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இதனை தொடர்ந்து பலரும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பல வீடுகளில் பெண்கள் கோலப் போராட்டம் நடத்தினர்.
குறிப்பாக திமுக எம்.பி, கனிமொழி,
திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரின் வீடுகளுக்கு முன்பு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு
எதிராக கோலம் போடபட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் எம்.பி.யுமான
தொல்.திருமாவளவனும் கோலம் போட்டு தன்னுடைய எதிர்ப்பை காட்டினார்.
இந்நிலையில் ”மு.க.ஸ்டாலின் கூறுவதை கேட்டு பெண்கள் கோலம் போட்டால் குடும்பம் அலங்கோலமாகிவிடும்” என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இந்நிலையில் ”மு.க.ஸ்டாலின் கூறுவதை கேட்டு பெண்கள் கோலம் போட்டால் குடும்பம் அலங்கோலமாகிவிடும்” என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக