பீகாரில் வெந்நீர் சூடாக இருந்ததால் அதை காவலர் மீது
டி.ஐ.ஜியே ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் ராஜ்கிர் மாவட்டத்தில் உள்ள மத்திய ஆயுதப்படை போலீஸ் பயிற்சி மையத்தில் டி.ஐ.ஜியாக பணிபுரிந்து வருபவர் டி.கே.திரிபாதி. நேற்று முன்தினம் போலீஸ் பயிற்சி மையத்தில் உள்ள உணவகத்திற்கு சென்ற அவர், பணியில் இருந்த அமோல் காரத் என்னும் காவலரிடம் வெந்நீர் எடுத்து வர சொல்லியிருக்கிறார். காரத் பிளாஸ்க்கில் இருந்த வெந்நீரை அவருக்கு ஊற்றிக் கொடுத்திருக்கிறார்.
வெந்நீர் சூடாக இருப்பதை கவனிக்காமல் டி.ஐ.ஜி வாயில் ஊற்றிக் கொண்டதால் அவரது வாய் வெந்தது. இதனால் கோபமடைந்த திரிபாதி வெந்நீர் கொண்டு வந்த கார்த்தை அழைத்து திட்டியுள்ளார். பதிலுக்கு காரத்தும் விவாதம் செய்யவே ஆத்திரமடைந்த திரிபாதி கொதிக்கும் வெந்நீரை காரத் முகத்தில் வீசியுள்ளார்.
இதனால் முகம் வெந்த அமோல் கராத்தை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து திரிபாதியிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. போலீஸார் இடையே ஏற்பட்ட இந்த மோதல் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக