உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில்
கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்த திரைப்படம் ஆளவந்தான். இந்த திரைப்படத்தை
சுரேஷ்கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படத்தில் உலகநாயகன் இரட்டை வேடத்தில்
நடித்திருப்பார். அதுவும் வில்லன் வேடமான நந்து எனும் கதாபாத்திரத்தில் ஒரு
சைக்கோவாக படத்தில் வாழ்ந்திருப்பார்.
தனது
முரட்டுத்தனமான நடிப்பால் ரசிகர்களை மிரட்டி இருந்தார் உலகநாயகன். அப்போது
பிரமாண்டமான பட்ஜெட்டில் இப்படம் தயாரானது. அந்த படத்தில் கார்ட்டூன் கதாபாத்திரம்
எல்லாம் வரும். ஆனால் ஏனோ அப்படம் ரிலீசான சமயத்தில் ரசிகர்களுக்கு அவர்கள்
எதிர்பார்த்த திருப்தியை தரவில்லை. அதனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல்
போனது.
தற்போது
படம் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தின் நீளம் கிட்டத்தட்ட 3 மணி நேரம்
ஆகும். அதனால் தற்போதைய ரசிகர்கள் மனநிலைக்கு ஏற்றவாறு இப்படத்தை சுருக்கி இரண்டரை
மணிநேரம் ஆக்கும் முயற்சியில் படக்குழு தீவிரமாக இயங்கி வருகிறது. ஆதலால் விரைவின்
அதாவது இந்த வருட இடையில் கோடை விடுமுறையில் ஆளவந்தான் படத்தை ரீ-ரிலீஸ்
செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக