71-வது குடியரசு தினத்தை கொண்டாட தேசம்
தயாராகி வரும் நிலையில், இந்த முக்கியமான சந்தர்ப்பத்தை குறிக்கும் விதமாக
ட்விட்டர் இந்தியா ‘முக்கோண இந்தியா கேட்’ என்று அழைக்கப்படும் தனிப்பயன் ஈமோஜியை
அறிமுகம் செய்துள்ளது!
பிரத்யேகமாக
வடிவமைக்கப்பட்ட ஈமோஜி, நாட்டின் தலைநகரில் குடியரசு தின அணிவகுப்பின் பிரமாண்டமான
சந்தர்ப்பத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உண்மையில்,
இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் @rashtrapatibhvn அலுவலகமும் 2020 ஜனவரி
25-ஆம் தேதி தேசத்துக்கான உரையினை குறித்து பகிர்களையில் இந்த ஈமோஜியை
பயன்படுத்தியுள்ளது.
நெட்டிசன்களுக்கு,
இந்த ஈமோஜி ஆனது 2020 ஜனவரி 30 வரை நேரலையில் இருக்கும், மேலும் ஆங்கிலம் மற்றும்
இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி, குஜராத்தி, உருது
மற்றும் குர்முகி உள்ளிட்ட பத்து இந்திய மொழிகளிலும் இது பயன்பாட்டுக்கு
கிடைக்கும்.
எனவே,
ஜனவரி 25 முதல் உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் 71-வது குடியரசு தினத்தைப் பற்றி
ட்வீட் செய்யும் போது, அவர்கள் ஈமோஜிகளுடன் தங்களது பதிவினை
பகிரலாம். குறித்த இந்த ஈமோஜியைப் பெற ஒருவர் #RepublicDay, #RepublicDayIndia
மற்றும் # RDay71 என்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக