Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 17 பிப்ரவரி, 2020

சியோமி 1 நிமிடத்திற்குள் ரூ. 200 கோடி மதிப்புக்கு Mi10 ஸ்மார்ட்போனை விற்றது

சியோமி 1 நிமிடத்திற்குள் ரூ. 200 கோடி மதிப்புக்கு Mi10 ஸ்மார்ட்போனை விற்றது



சியோமி (Xiaomi) நிறுவனம் வெளியிட்ட ஒரு ஸ்மார்ட்போனின் விற்பனை பெரும் சாதனையை செய்துள்ளது. 1 நிமிடத்திற்குள், சியோமியின் இந்த தொலைபேசியின் பல யூனிட்கள் விற்பனை ஆகியுள்ளது. 

இதன் மதிப்பு விலை ரூ .200 கோடிக்கு மேல் எனக் கூறப்படுகிறது. இவ்வளவு அதிக அளவில் விற்பனை ஆன சியோமியின் இந்த தொலைபேசி Mi10 ஆகும். சியோமியின் இந்த ஸ்மார்ட்போன் வெள்ளிக்கிழமை தான் முதல் முறையாக விற்பனைக்கு வந்தது. அனைத்து போன்களும் 1 நிமிடத்திற்குள் விற்பனை ஆகியுள்ளது. 

இருப்பினும், 1 நிமிடத்திற்குள் எத்தனை ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை சியோமி வெளியிடவில்லை. Mi10 ஸ்மார்ட்போன் இப்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சியோமியின் இந்த ஸ்மார்ட்போனின் இரண்டாவது விற்பனை அடுத்த வாரம் பிப்ரவரி 21 அன்று இருக்கும்.

ஸ்மார்ட்போன் மூன்று வகைகளில் வருகிறது:

சியோமி நிறுவனத்தின் படி, இந்த ஸ்மார்ட்போன் சியோமி மால், டிமால் மற்றும் ஜே.டி.காம் உள்ளிட்ட ஒவ்வொரு கடையிலும் விற்கப்படுகிறது. 200 மில்லியனுக்கும் அதிகமான யுவான் மதிப்புள்ள தொலைபேசிகள் 1 நிமிடத்திற்குள் சீனாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 

சியோமி Mi10 ஸ்மார்ட்போன் மூன்று வகைகளில் வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு கொண்ட வேரியண்டின் விலை 3,999 யுவான் (சுமார் 40,800 ரூபாய்). அதே நேரத்தில், சியோமி Mi10 இன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பு உள்ள போன் 4,299 யுவான் (சுமார் ரூ .44,000). 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 4,699 யுவான் (சுமார் ரூ .48,000). ஆகும்.

108 மெகாபிக்சல் முதன்மை கேமரா:

இந்த போனின் வசதிகளை பற்றி பேசுகையில், சியோமியின் இந்த ஸ்மார்ட்போனில் 6.67 அங்குல வளைந்த AMOLED டிஸ்ப்ளே உள்ளது, இது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தையும் 180 ஹெர்ட்ஸ் தொடு மாதிரி விகிதத்தையும் கொண்டுள்ளது. 

Xiaomi Mi10 ஸ்மார்ட்போன் குவால்காமின் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 3.0 சேமிப்புடன் வருகிறது. 

தொலைபேசியின் பின்புறத்தில் உள்ள முதன்மை கேமரா 108 மெகாபிக்சல்கள். இது தவிர, தொலைபேசியின் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படுகிறது. மேலும், 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளன.

செல்பி மற்றும் வீடியோ அழைப்பிற்காக தொலைபேசியின் முன்புறத்தில் 20 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இணைப்பு பற்றி பேசினால், தொலைபேசியில் வைஃபை 6, புளூடூத் 5.1, டூயல்-மோட் 5 ஜி மற்றும் என்எப்சி போன்ற அம்சங்கள் உள்ளன. 

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4,780 mAh பேட்டரி உள்ளது, இது 30W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக