Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 17 பிப்ரவரி, 2020

தேசிய அளவில் மது ஒழிப்பை அமல்படுத்த வேண்டும்.! பீகார் முதல்வர் வலியுறுத்தல்.!


 தேசிய அளவில் மது ஒழிப்பை அமல்படுத்த வேண்டும்.! பீகார் முதல்வர் வலியுறுத்தல்.!

பீகார் மாநிலத்தில் மது இல்லாத நாடு என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது மது ஒழிப்பை ஒரு சில மாநிலங்களில் மட்டும் இருக்குறது.
அதுமட்டுமல்லாமல் இதை நாடு முழுவதும் மது ஒழிப்பை அமல்படுத்த வேண்டும். ஏனெனில் இது மகாத்மா காந்தி பிறந்த மண்ணு, மதுவால் பல உயிரிழப்புகள் நடந்திருக்கிறது என்றும், கடந்த களங்களில் இந்தியாவில் மது ஒழிப்பு  அமலில் இருந்துள்ளது. ஆனால் காலப்போக்கில் அதை ரத்து செய்ததாக தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், பீகாரில் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூரால் மது அதிகமாக திணிக்கப்பட்டதாவும், மதுவை ஒழிக்க தான் 2011 முதல் திட்டமிட்டு இறுதியாக 2016-ம் ஆண்டு அதை நிறைவேற்றியதாகவும் தெரிவித்தார். கடந்த 2016 முதல் இன்றுவரை பீகாரில் மதுவிற்கு தடை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!