சீனாவில் இருந்து சென்னைக்கு வந்த கப்பலில் கூண்டில்
அடைக்கப்பட்ட பூனை ஒன்று இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில்
துவங்கிய கொரோனா பாதிப்பு இப்போது உலக மக்கள் அனைவரையும் அச்சத்தில் வைத்துள்ளது.
குறிப்பாக இந்தியா ஜனவரி 15 அல்லது அதன் பிறகு சீனாவில் தங்கியிருந்தவர்கள்
நேபாளம், பூடான் பங்களாதேஷ், மியான்மர் எல்லைகள் வழையே ஆகாயம், தரை மற்றும் கடல்
வழியே இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில்
சென்னை துறைமுகத்திற்கு சீனாவில் இருந்து வந்த கப்பலில், கூண்டில் அடைக்கப்பட்ட
நிலையில் பூனை ஒன்று இருந்துள்ளது. விளையாட்டு பொம்மைகள் வந்த அந்த கண்டெய்னரில்
பூனை இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பூனைக்கு மருத்துவ பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும்
சீனாவில் இருந்து வந்த கப்பலில் பூனை இருந்தது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரப்ப
மேற்கொள்ளப்பட்ட முயற்சியா என சந்தேகிக்கப்பட்டு வருகிறது. மேலும், பூனை மற்றும்
கண்டெய்னரில் வந்த பொருட்கள் அனைத்தையும் திருப்பி அனுப்பும் பணியில் அதிகாரிகள்
ஈடுப்பட்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக