மத்திய அரசின்
தொலைத்தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையில் ஆயிரம் கோடி ரூபாயை செலுத்தியுள்ளது
வோடஃபோன் ஐடியா.
மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகைகளை உடனடியாக செலுத்துமாறு ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட 15 தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 14ம் தேதி அறிவிப்புன் ஒன்றை வெளியிட்ட தொலைத்தொடர்பு துறை நள்ளிரவுக்குள் நிலுவை தொகையை செலுத்த சொல்லி உத்தரவிட்டது. ஆனால் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் நள்ளிரவுக்கு அவ்வளவு தொகையை செலுத்த முடியவில்லை.
15 தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இருந்து அரசுக்கு வர வேண்டிய நிலுவை தொகை 1 லட்சத்து 47 ஆயிரம் கோடி ஆகும். இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் கடந்த 17ம் தேதி அரசுக்கு 2500 கோடி ரூபாய் நிலுவை தொகையை செலுத்தியது. 1000 கோடி ரூபாய் இந்த வார இறுதியில் வழங்குவதாய் ஒப்புதல் அளித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து தற்போது வோடபோன் ஐடியா நிறுவனமும் நிலுவை தொகையில் 1000 கோடி ரூபாயை செலுத்தியுள்ளது. மீத தொகையை கொஞ்சம் கொஞ்சமாக செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக