Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

டூயல் கேம் + 4000எம்ஏஎச் பேட்டரி: ரூ.5,499-விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன் அறிமுகம்.!


  ஐடெல் விஷன் 1
டெல் நிறுவனத்தின் துணை நிறுவனமான டிரான்ஷன் தற்சமயம் புதிய ஐடெல் விஷன் 1 என அழைக்கப்படும் ஸ்மார்ட்போன் மாடலை மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் ப்ளூ மற்றும் கிரேடேஷன் பர்பில் என்ற இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
ஐடெல் விஷன் 1
வெளிவந்த ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போன் ஆனது 6.08-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1560 x 720 பிக்சல் திர்மானம், 500nits பிரைட்நஸ், 19:5:9 என்ற திரைவிகிதம்,2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவு என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.
ஆக்டோ-கோர் Unisoc SC9863A
இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் Unisoc SC9863A பிராசஸர் வசதியுடன் IMG8322ஜிபயு ஆதரவையும் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம்; வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஐடெல் விஷன் 1 கேமராக்கள்
ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போன் மாடலின் பின்புறம் 8எம்பி பிரைமரி லென்ஸ்+ 0.08எம்பி செகன்டரி சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவு, ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
4000எம்ஏஎச் பேட்டரி
ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போன் மாடலில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 4ஜி வோல்ட்இ, வைஃபை, டூயல்-சிம்,மைக்ரோ யுஎஸ்பி போர்ட், புளூடூத் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி
ஐடெல் விஷன் 1 சாதனத்தில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்
ஐடெல் விஷன் 1 விலை
ஐடெல் நிறுவனத்தின் துணை நிறுவனமான டிரான்ஷன் கொண்டுவந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,499-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த பாதுகாப்பு அம்சம் மற்றும் மென்பொருள் அம்சஙளுடன் வெளிவந்துள்ளது..
ரூ2,200வரை கேஷ்பேக்
மேலும் ஐடெல் விஷன் 1 சாதனத்துடன் ரூ .799 மதிப்புள்ள இலவச ஐடெல் ப்ளூடூத் வயர்லெஸ் ஹெட்செட்டை வழங்குகிறது இந்நிறுவனம். மேலும் ஜியோ நிறுவனம் சார்பில் 2,200வரை கேஷ்பேக் சலுகை மற்றும் டேட்டா சலுகைகள் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக