Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

44MP டூயல் செல்பீ கேம் + 48MP க்வாட் கேம்; இருக்கு.. இந்தியாவில் மார்ச் 2-ல் ஒரு கேமரா புரட்சி இருக்கு!

லகின் முதல் 44MP Dual-punch hole செல்பீ கேமராவை கொண்ட Oppo நிறுவனத்தின் Reno 3 Pro ஆனது வருகிற மார்ச் 2 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் ஆகிறது!

ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனை வருகிற மார்ச் 2 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. பிரபல இகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட் வழியாக இதன் வெளியீட்டு தேதியானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்த அதிகாரப்பூர்வ டீசரையும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. முன்னதாக இது நடிகர் வித்யுத் ஜம்வால் நடித்த புதிய குறும்பட விளம்பரத்தையும் வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பிளிப்கார்ட் தளம் வழியாக மட்டுமின்றி புதிய ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் வழியாகவும் வாங்க கிடைக்கும்.

ரெனோ 3 ப்ரோ (இந்திய மாடல்) எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
டிஸ்பிளே
6.5 இன்ச் AMOLED முழு எச்டி+
ப்ராசஸர்
க்வால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி
ஓஎஸ்
கலர்ஓஎஸ் 7.0 (ஆண்ட்ராய்டு 10)
இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்
இருக்கிறது
ரியர் கேமரா
48MP + 13MP + 8MP + 2MP
செல்பீ
44MP + 2MP டூயல் பஞ்ச்-ஹோல் கேமரா
பாஸ்ட் சார்ஜிங்
30W VOOC 4.0 ஆதரவு
பேட்டரி
4000mAh

ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 3 ப்ரோ, இந்தியாவில் 44 மெகாபிக்சல் டூயல் பஞ்ச் ஹோல் கேமராவுடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக லீக் ஆன ரெனோ 3 ப்ரோவின் க்ளோபல் வெர்ஷனின் புகைப்படத்தின் வழியாக இது டூயல் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்பது தெரியவந்தது.

 இது சாத்தியமாகும் பட்சத்தில், அதாவது ஒப்போ ரெனோ 3 ப்ரோ 44 எம்.பி பஞ்ச்-ஹோல் முன்பக்க கேமராவைக் கொண்டிருக்கும் பட்சத்தில், உலகின் முதல் 44MP டூயல் செல்பீ கேமரா கொண்ட ஸ்மார்ட்போனாக இது திகழும். இதன் மேலும் இரண்டாம் நிலை கேமரா 2MP டெப்த் சென்சார் ஆகும்.

சீனாவில் அறிமுகமான ஒப்போ ரெனோ 3 ப்ரோ 5ஜி ஆனது 2400 × 1080 பிக்சல்கள் அளவிலான ஸ்க்ரீன் ரெசல்யூஷன் கொண்ட 6.5 இன்ச் அளவிலான AMOLED முழு எச்டி+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2.4GHz ஆக்டா கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது, இது அட்ரினோ 620 ஜி.பீ.யு உடனான க்வால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட் ஆகும்.
 
இந்த ஸ்மார்ட்போன் கலர்ஓஎஸ் 7.0 கொண்டு இயங்குகிறது, இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையாகக் கொண்டது. இதில் இ -டிஸ்பிளே கைரேகை சென்சாரும் உள்ளது.

கேமராத்துறையை பொறுத்தவரை, ரெனோ 3 ப்ரோ 5ஜி ஆனது 48 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 586 சென்சார் + 13 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் + 8 மெகாபிக்சல் (116 டிகிரி) அல்ட்ரா வைட் கேமரா + 2 மெகாபிக்சல் மோனோ லென்ஸ் என்கிற க்வாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
 
முன்பக்கத்தை பொறுத்தவரை, 44 + 2 மெகாபிக்சஸ் (எஃப் / 2.4) செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இந்த மொத்த அமைப்பும் 30W VOOC 4.0 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 4000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக