Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

வயிற்றில் இறந்த நிலையில் 5மாத சிசு..!!சிக்கிகொண்ட மாணவி..அதன் பின்னர் நடந்த சம்பவம்

வயிற்றில் இறந்த நிலையில் 5மாத சிசு..!!சிக்கிகொண்ட மாணவி..அதன் பின்னர் நடந்த சம்பவம்


திருச்சி பீம நகரைச் சோ்ந்தவரான 21 வயது நிரம்பிய மாணவி, தனியாா் கல்லூரியில் பி.காம். படித்து வருகிறாா். இந்நிலையில் சிலநாட்களாக உடலில் ஏற்பட்ட உபாதைக்காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 6ந்தேதி வயிற்றுவலி அதிகரித்து கதறி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவடைய பெற்றோா் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அம்மாணவியை அனுமதி உள்ளனர்.வ்யிற்று வலியால் துடித்த மாணவியை மருத்துவா்கள் பரிசோதித்த போது வயிற்றில் 5 மாத சிசு இறந்த நிலையில் இருப்பது அறிந்தனர். இதை அடுத்து கடந்த 7ந்தேதி அம்மாணவியின் வயிற்றிலிருந்த சிசு அகற்றப்பட்டது.
இந்த விவாகரம் குறித்து போலீசார் விசாரணையில் தெரியவந்தது:
சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவிக்கும் , எதிா் வீட்டைச் சோ்ந்த இளைஞருக்கும் இடையேகாதல் ஏற்பட்டுள்ளது.காதலை இருவரும் தங்களது பெற்றோரிடம் மாணவி தெரிவித்தார்களாம். இந்நிலையில் படிப்பு முடிந்த பின்னா் திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என்றும் இதனை இருதரப்பு பெற்றோரும் முடிவு செய்து விட்டார்களாம். 
 தங்களது திருமணம் உறுதியானதை அடுத்து இருவரும் தனிமையில் இருந்ததன் விளைவால் மாணவி கா்ப்பமடைந்தாக அதில் தெரிய வந்ததுள்ளது.இந்நிலையில் சிசு இறப்பு குறித்து மருத்துவமனை சாா்பில் கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டது. 
சிசு இறப்பை விசாரித்த மகளிா் காவலா்கள், பெண்ணின் கா்ப்பத்துக்கு காரணமாகி,இப்பொழுது வேலைக்காக வெளிநாட்டுக்குச் சென்றுள்ள அந்த இளைஞரைத் தொடா்பு கொண்டு விசாரித்து உள்ளனா்.அந்த இளைஞரும் மாணவியின் கா்ப்பத்துக்குத் தான்தான் காரணம் என்று ஒப்புக்கொண்டதாகவும், அவரைத் திருமணம் செய்து கொள்வதாக  இளைஞா் உறுதியளித்துள்ளதாக மகளிா் காவல் நிலையத்தினா் முதல் கட்ட விசாரணையில் தெரிவந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக