பாகிஸ்தானில் மனைவிக்கு தெரியாமல்
மூன்றாவது திருமணம் செய்ய முயன்றவரை முதல் மனைவி வெளுத்தெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாகிஸ்தான்
கராச்சியைச் சேர்ந்தவர் ரஃபிக். இவர் தனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து
கொண்டிருந்தது மண்டபத்தில் திருமண வரவேற்புக்காக மணமகன் மற்றும் மணப்பெண்ணின்
உறவினர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில்
மதிஹா என்ற பெண் தன் உறவினர்களுடன் வேக வேகமாகத் திருமண மண்டபத்திற்குள் நுழைத்து
மணமகனை அடிக்க துவங்கினர். அவருடன் வந்த உறவினர்களும் மணமகனை அடித்தனர்.
பின்னர்
மண்டபத்திலிருந்த மற்றவர்கள் மதிஹாவையும் அவரது உறவினர்களையும் தடுத்து
போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரித்த போது ரஃபிக்கின் முதல் மனைவி
தான் மதிஹா என்றும், அவர் மதிஹாவை திருமணம் செய்துவிட்டு அவருக்குத் தெரியாமல்
ஏற்கனவே இரண்டாவது திருமணமும் செய்துள்ளார் என்று தெரிய வந்தது.
பின்னர்
சில நாட்கள் கழித்து மதிஹாவிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் வாழ விரும்புவதாக
வந்தார் எனவும். அதன் பின்னர் மீண்டும் தற்போது மதிஹாவிற்கு தெரியாமல் மூன்றாவது
திருமணத்திற்கு அவர் தயார் ஆனதால் ஆத்திரத்தில் இப்படிச் செய்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து
போலீசார் இது சிவில் பிரச்சினை இதை நீங்கள் கோட்டில் சென்று
பார்த்துக்கொள்ளுங்கள் திருமண மண்டபத்திற்குள் புகுந்து மாப்பிள்ளையை அடித்தது
தவறு என மதிஹா மற்றும் அவரது உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு
செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக