Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 17 பிப்ரவரி, 2020

வந்தது இந்தியாவின் முதல் 5ஜி மொபைல் போன்… அறிமுகம் செய்தது ஐகூ நிறுவனம்…

வந்தது இந்தியாவின் முதல் 5ஜி மொபைல் போன்… அறிமுகம் செய்தது ஐகூ நிறுவனம்…

விவோ நிறுவனத்தின் மற்றுமொரு  பிராண்டான  ஐகூ ரக மாடல்களை  இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது விவோ நிறுவனம். 

இந்தியாவில் வரும்  பிப்ரவரி 25-ம் தேதி செவ்வாய் கிழமை இந்த ஐகூ பிராண்டின் புதிய ஐகூ 3 ரக ஸ்மார்ட்போனினை  அறிமுகப்படுத்த  இருக்கிறது.

இந்த புதிய ஐகூ 3 ஸ்மார்ட்போன்கள் விரைவில்  ப்ளிப்கார்ட் மற்றும் ஐகூ அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன சந்தையில் ஐகூ பிராண்டு கேமிங் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யும் வகையில் ஏற்கனவே களமிறங்கியது.

இந்நிலையில்,  ஐகூ பிராண்டு சீனாவை தொடர்ந்து இந்திய சந்தையிலும் இந்த ரக மாடலை  களமிறங்க இருக்கிறது.ஏற்கனவே  சீன சந்தையில் அறிமுகப்படுத்திய  ஐகூ பிராண்டு போல்  இல்லாமல், இந்தியாவில் புதிய வடிவில்  ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது.

இந்த  புதிய ஐகூ பிராண்டு ஸ்மார்ட்போன் இந்தியாவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிகிறது. இந்திய சந்தையில் இதுவரை 5ஜி நெட்வொர்க் வசதி இதுவரை துவங்கப்படவில்லை. இதன் சிறப்பம்சங்களை பொருத்தவரையில்.
  • புதிய ஐகூ 3 ஸ்மார்ட்போனில் 6 ஜி.பி., 8 ஜி.பி. அல்லது 12 ஜி.பி. வரையிலான ரேம் வழங்கப்படலாம்.
  • இத்துடன் இதில் UFS 3.1 வசதி கொம்ட 128 ஜி.பி. அல்லது 256 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம்.
  • புதிய ஐகூ 3 ஸ்மார்ட்போன் 4370 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக