பாதுகாப்பு துறையை பலப்படுத்தும்
வகையில் நவீன கருவிகள் மற்றும் போர் விமானங்களை வாங்குவதில் மத்திய அரசு தீவிர
கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் ஒற்றை எஞ்சின் கொண்ட 83 தேஜாஸ் மார்க்1ஏ
(Tejas Mark-1A) ஜெட் விமானங்களை ரூ.49,797 கோடி கொள்முதல் செய்ய கடந்த 2016-ம்
ஆண்டு நவம்பரில், பாதுகாப்புத்துறை ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து
அதை தயாரித்து வழங்க வேண்டிய (இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்) ஹெச்ஏஎல்
நிறுவனம் ரூ.56,500 கோடி என குறிப்பிட்டு ஒப்பந்தத்தை கூறியது.
இந்த
விலை வேறுபாடு காரணமாக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் பேச்சுவார்த்தை நடைபெற்று
வந்தது. பின்னர் ரூ.17,000 கோடி குறைக்கப்பட்டு, ரூ.39,000 கோடிக்கு 83 தேஜாஸ்
போர் விமானங்களை தயாரித்து வழங்குவது என ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இது
உள்நாட்டு அளவில் போர் விமானங்கள் தொடர்பான மிகப்பெரிய ஒப்பந்தமாக
பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக