Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 13 பிப்ரவரி, 2020

ஆன்லைன் மூலம் வீடியோ காலில் நிச்சயதார்த்தம்: எங்கே போகிறது சடங்குகள்

ஆன்லைன் மூலம் வீடியோ காலில் நிச்சயதார்த்தம்


திருமண நிச்சயதார்த்தம் மற்றும் திருமண வைபவம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும். அந்த நிகழ்வை அவர்கள் வாழ்க்கை முழுவதும் மலரும் நினைவுகளாக கொண்டிருப்பார்கள். ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு திருமண நிச்சயதார்த்தம் ஆன்லைன் மூலம் வீடியோ காலில் நடந்து உள்ளது அனைவரையும் ஆச்சரிப்பட வைத்துள்ளது.

வளர்ந்து வரும் டெக்னாலஜியில் எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் திருமண நிச்சயதார்த்த கூட ஆன்லைனில் செய்வதா? என பல்வேறு பலர் விமர்சனம் செய்துள்ளனர்.

இருப்பினும் மாப்பிள்ளை மற்றும் மணமகள் ஆகிய இருவரும் வெவ்வேறு நாடுகளில் பணிபுரிந்து கொண்டு இருந்ததால் அவர்களால் திருமணம் விடுமுறை எடுத்து வரமுடியவில்லை என்றும் இதனை அடுத்து மணமகள் ஒரு வீடியோ காலிலும் மணமகன் ஒரு வீடியோ காலிலும் இருக்க, அந்த இரு செல்போன்கள் முன் இரு வீட்டார்களும் நிச்சயதார்த்த சடங்குகள் செய்து திருமண நிச்சயதார்த்த வைபவத்தை முடித்துள்ளனர்.

இந்த நூதனமான நிச்சயதார்த்த குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. திருமணத்திற்காவது மணமகன், மணமகள் வருவார்களா? அல்லது ஆன்லைனிலேயே திருமணமும் செய்து வருவார்களா? என்று இந்த நிகழ்வு குறித்து சமூக வலைத்தள பயனாளிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக