டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
மூன்றாவது முறையாக வெற்றி பெற்று முதல்வர் பதவியை சமீபத்தில் ஏற்றார் அவரது
வெற்றிக்கு முதல் காரணமாக கூறப்படுவது அவர் அளித்த இலவசங்கள் தான். குறிப்பாக
பெண்களுக்கு பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் இலவசம் என்ற அறிவிப்பு ஒட்டுமொத்த
பெண்களின் வாக்குகளை அவர் பெற்றதற்கு காரணமாக இருந்தது
இந்த
நிலையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பின்பற்றி மேலும் ஒரு சில மாநிலங்கள்
பெண்களுக்கு பேருந்துகளில் இலவசப் பயணம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த
வகையில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இதுகுறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட
உள்ளார். ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த்
கெஜ்ரிவால் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்கண்டில்
அரசு பேருந்துகள் இல்லை என்றாலும் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து குறிப்பிட்ட
சில நேரங்களில் மட்டும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவச பயணம் அறிவிக்க
திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கல்வியில் புதுமை, வேலை வாய்ப்பு
இல்லாதவர்களுக்கு உதவி தொகை உள்ளிட்ட பல திட்டங்களை முதல்வர் அறிவிக்கவுள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக