Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 26 பிப்ரவரி, 2020

காலையில எழுந்ததும் காபி குடிக்கிற ஆளா நீங்க... அப்போ இந்த சந்தோஷமான செய்தி உங்களுக்குதான்...


 Image result for காபி
காபி பருகுவது காலை நேர தூக்கத்தை போக்குவதற்காக என்று நம்மில் பலர் நினைத்துக் கொள்வோம். ஆனால் காபி பருகுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
எழுந்ததும் காபியா?
காலையில் எழுந்தவுடன் காபி பருகும் பழக்கம் பலருக்கும் உண்டு. பொதுவாக பெண்களில் சிலர் காலையில் வேலைகளை முடித்துவிட்டு, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, கணவரை அலுவலகம் அனுப்பிவிட்டு , நல்ல இசை அல்லது இயற்கையை ரசித்தபடி ஒரு கப் காபி பருகுவதால் அவர்கள் நாள் உற்சாகமாகிறது. அதே உற்சாகத்துடன் மற்ற வேலைகளை செய்யத் தொடங்குவார்கள். காபி உடலுக்கு நல்லதா அல்லது கெட்டதா என்று ஒரு பக்கம் விவாதங்கள் நடந்தபடி உள்ளது. ஆன்டிஆக்சிடெண்ட் தன்மை , மூளை திறனை ஊக்குவிக்கும் திறமை ஆகியவற்றை பற்றி காபி பிரியர்கள் பேசும்போது, காபி பருகுவதால் உண்டாகும் தூக்கமின்மை , அஜீரணம் , உயர் இரத்த அழுத்த பாதிப்பு போன்றவற்றை குறித்து காபியை வெறுப்பவர்கள் பேசி வருகின்றனர். ஆனால் தற்போது காபி பிரியர்கள் சந்தோஷப்படக்கூடிய செய்தி கிடைத்துள்ளது. ஆம், காபியை பருகுவது நன்மை என்று வலியுறுத்தும் 10 காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
ஆன்டி- ஆக்சிடண்ட்டுகள்
ஆரோக்கியமான ஆன்டிஆக்சிடென்ட்களின் ஆதாரமாக விளங்குவது காபி. ஆன்டி ஆக்சிடென்ட்களின் சூப்பர் ஸ்டார்களான க்ரீன் டீ மற்றும் கொக்கோவை விட காபியில் உயர் ஆன்டிஆக்சிடெண்ட் உள்ளது. ஆன்டிஆக்சிடெண்ட் நாட்பட்ட உடல் கோளாறுகளான கீல்வாதம், மற்றும் பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு முக்கிய காரணமான அழற்சியை எதிர்த்து போராடும். மேலும் பிரீ ரேடிக்கல்களை சமநிலை படுத்தும். இந்த ப்ரீ ரேடிக்கல்கள் அன்றாட வளர்சிதை மாற்றத்தின்போது உருவாகின்றன, ஆனால் இவை ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை உண்டாக்கி நாட்பட்ட வியாதிகளுக்கு வழிவகுக்கிறது. ஆன்டிஆக்சிடெண்ட் உடலை ஆரோக்கியமாக வைத்து அணுக்கள் சேதமடைவதைத் தடுக்கிறது. குறிப்பாக காபியில் குளோரோஜெனிக் அமிலம் என்னும் ஆன்டிஆக்சிடெண்ட் உள்ளது. இது இதய நோயைத் தடுக்க உதவுகிறது.
காஃபின் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது
காபி பருகாதவர்களுடன் ஒப்பிடும்போது காபி பருகுபவர்களின் ஞாபக திறன் அதிகரித்து காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மூளையில் ஞாபகம் மற்றும் கவனம் போன்றவற்றிற்கு பொறுப்பாக இருக்கும் பகுதிகளில் காஃபின் தாக்கத்தை ஏற்படுத்துவது அறியப்படுகிறது. அதனால் ஒரு குறைந்த கால கவன அதிகரிப்பு மற்றும் ஞாபக சக்தி அதிகரிப்பு உண்டாகிறது. ஆனால் இந்த தாக்கம் எவ்வளவு நேரம் அல்லது நாட்கள் நீடிக்கிறது என்பது குறித்த தெளிவான தகவல் இல்லை மற்றும் இந்த அளவு நபருக்கு நபர் மாறுபடுகிறது.
அறிவாற்றல் குறைபாட்டைத் தடுக்க
மூளை செயல்பாட்டை அதிகரிக்கவும், ஞாபக சக்தியை மேம்படுத்தவும் காபி பருகலாம் என்று நாம் அறிந்து கொண்டோம். அதே போல், காபி பருகுவதை வழக்கமாக்கிக் கொள்வதால் , அல்சைமர் மற்றும் டிமென்ஷியா வகைகளுடன் தொடர்புடையோய அறிவாற்றல் குறைபாட்டை தடுக்கவும் காபி உதவுகிறது. அல்சைமர் தொடக்கம் மற்றும் வளர்ச்சிக்கு பங்களிக்கும் பீட்டா அமிலாய்டு கட்டமைப்பை தடுக்க காஃபின் உதவுகிறது . காபி பருகுவதால் டைப் 2 நீரிழிவு அபாயம் குறைகிறது. டைப் 2 நீரிழிவு , டிமென்ஷியா ஏற்படுவதற்கான அபாய காரணியாகும். எனவே டிமென்ஷியா பாதிப்பும் தடுக்கப்படுகிறது.
இதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது
13 வருடங்கள் டச்சில் நடத்தப்பட்ட ஆய்வில், மிதமான அளவு அதாவது தினமும் 2 முதல் 4 கப் காபி பருகுகிறவர்களுக்கு, இதை விட அதிகம் காபி பருகுகிறவர்கள் அல்லது முற்றிலும் காபி பருகாதவர்கள் ஆகியோருடன் ஒப்பிடும்போது இதய நோய் ஏற்படும் அபாயம் 20% குறைகிறது . காபி பருகுவதால் அழற்சி காரணமாக தமனிகளில் உண்டாகும் சேதங்கள் தடுக்கப்பட்டு இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதாக சில ஆதாரங்கள் கூறுகின்றன.
காபி குடிப்பது மாரடைப்பை உண்டாக்கும் போன்ற வீண் வதந்திகளால் பலரும் காபியை எமனாகப் பார்க்கிறார்கள். அளவோடு குடித்துக் கொண்டால் எந்த பிரச்சினையும் காபியால் வராது.
சில குறிப்பிட்ட புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது
காபி பருகும் ஆண்களுக்கு ப்ரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாக அறியப்படுகிறது. தினமும் 4 கப் காபியை விட அதிகம் பருகும் பெண்களுக்கு எண்டோமெட்ரியல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் , தினமும் ஒரு கப் காபி பருகும் பெண்களை ஒப்பிடும்போது 25% குறைவாக காணப்படுகிறது. காபியில் காணப்படும் பாலிபீனால்கள், ஆன்டிஆக்சிடெண்ட் தாவர ரசாயனங்கள் ஆகியவற்றில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பதாகவும் இவை கட்டிகளால் உண்டாகும் அழற்சியைக் குறைப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
டைப் 2 நீரிழிவு அபாயத்தைத் குறைக்க
தினமும் ஒரு கப் காபி பருகுவதால் டைப் 2 நீரிழிவு பாதிப்பு வளர்வதற்கான அபாயம் தடுக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. முற்றிலும் காபி பருகாதவர்கள் அல்லது மிகக் குறைந்த அளவு காபி பருகுபவர்களுடன் ஒப்பிடும்போது தினமும் 4 கப் காபியை விட அதிகம் பருகுகிறவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் அபாயம் 50% குறைவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்க பல்வேறு வழிகளில் காபி உதவுகிறது. காபி பருகுவதால் உடல் இன்சுலின் பயன்படுத்த உதவுகிறது மற்றும் இன்சுலின் தயாரிக்கும் அணுக்கள் பாதுகாக்கப்பட்டு இரத்த சர்க்கரை அளவு சரியான முறையில் கட்டுப்படுத்த படுகிறது . திசுக்களின் சேதங்கள் தடுக்கப்படுகிறது. டைப் 2 நீரிழிவிற்கு காரணமான அழற்சியுடன் போராடுகிறது.
காபி கல்லீரலுக்கு உகந்தது
காபி பருகுவதால் கல்லீரல் புற்றுநோய் தடுக்கப்படுகிறது. மேலும் காபி பருகுவதால் கல்லீரலில் இழைநார் வளர்ச்சி குறிப்பாக மதுவால் ஏற்படும் இழைநார் வளர்ச்சி குறைகிறது. கல்லீரலில் நொதிகள் அளவு அதிகரிப்பதால் அழற்சி அதிகரித்து கல்லீரலில் சேதம் ஏற்படுகிறது. காபி அதிகம் பருகுவதால் கல்லீரலில் நொதிகள் அளவு குறைகிறது. இதனால் கல்லீரல் வீக்கம், கல்லீரலில் உண்டாகும் அழற்சி, கல்லீரலில் கொழுப்புச் சேர்மானம் ஆகியவற்றைத் தடுக்கிறது. குறிப்பாக குடிப்பழக்கத்தால் ஏற்படும் கல்லீரலில் சேரும் நச்சுக்கள் சுத்தப்படுத்தப்படுகின்றன.
காபி பருகுவதால் உடற்பயிற்சி செயல்பாடுகள் துரிதமாகும்
காபி பருகுவதால் சோர்வு அகற்றப்பட்டு, புத்துணர்ச்சி கிடைக்கிறது. அதனால் உடற்பயிற்சி செய்பவர்கள் நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இருக்க முடிகிறது. தசைகள் வலிமை அடைகின்றன. அதனால் உடைபயிற்சி செய்பவர்களின் தசை வலி குறைகிறது. மேலும் இரத்தத்தில் கொழுப்பு அமிலங்கள் அதிகரிக்கிறது. அதனால் சகிப்புத்தன்மை அதிகரிக்கிறது. உங்களுடைய தசைகள் வலிமை பெற காஃபினைன் முக்கியப் பங்கு வகிக்கிறது. சிலர் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே உடலளவிலும் மனதளவிலும் சோர்வடைந்து விடுவார்கள். அப்படியில்லாமல் நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு காபி பருகுவது நல்லது.
காபி பருகுவதால் மனஅழுத்தம் குறைகிறது
காபி பருகுவதால் ஆண்கள் மற்றும் பெண்களின் மனஅழுத்தம் குறைகிறது என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. அதிகமாக காபி பருகுபவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதற்கான அபாயம் 20% குறைவதாக கூறப்படுகிறது. காபி பருகுவதால் மனஅழுத்தம் எப்படி குறைகிறது என்பதற்கு சரியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும், மனநிலையை கட்டுப்படுத்தும் நரம்புக்கடத்திகளை காஃபின் ஊக்குவிக்கிறது என்று அறியப்படுகிறது. அதனால் வீட்டில் பெரியவர்கள் டென்ஷனாக இருக்கும்போது ஒரு கப் காபி கொடேன் என்று கேட்கிறார்கள். நாமோ இந்த ஆளுக்கு வேற வேலையே இல்ல என்று அலுத்துக் கொள்கிறோம். இனிமேல் காபிக்காக டென்ஷன் வேண்டாம். டென்ஷன குறைக்க காபி குடிங்க.
காபி கீல்வாதத்தில் இருந்து பாதுகாப்பு தருகிறது
ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடத்தப்பட்ட தனித்தனி சோதனைகளின் அடிப்படையில் காபி தொடர்ச்சியாக பருகுவதால் கீல்வாதம் உண்டாகும் அபாயம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு நாளில் நான்கு முறைக்கு மேல் காபி பருகும் பெண்களுக்கு கீல்வாதம் உண்டாகும் அபாயம் 57% குறைவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. ஒன்று முதல் மூன்று கப் காபி தினமும் பருகும் பெண்களுக்கு 22% கீ;வாதம் ஏற்படும் அபாயம் குறைவதாக கூறப்படுகிறது. நான்கு முதல் 5 கப் காபி தினமும் பருகும் ஆண்களுக்கு கீல்வாதம் ஏற்படுவதற்கான அபாயம் 40% குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. 6 கப் காபிக்கு அதிகமாக பருகும் ஆண்களுக்கு கீல்வாதம் ஏற்படுவதற்கான அபாயம் 60% குறைவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. காபியில் உள்ள ஆன்டிஆக்சிடெண்ட் தன்மை காரணமாக இன்சுலின் அளவு குறைகிறது, அதனால் யூரிக் அமில அளவு குறைந்து கீல்வாதம் ஏற்படுவதற்கான அபாயம் குறைகிறது என்று “ நர்ஸ் ஹெல்த் ஸ்டடி” என்ற ஆய்வு குறிப்பிடுகிறது
காபி பருகுவதால் உண்டாகும் தீமைகள்
காபி பருகுவதால் உண்டாகும் நன்மைகள் ஒரு நற்செய்தியாக இருந்தாலும், அதிகம் காபி பருகுவதால் சில தீமைகளும் உள்ளன. சிலருக்கு காபி பருகுவதால் எரிச்சல் உணர்வு, பதட்டம் போன்ற பாதிப்புகள் உண்டாகிறது. சிலருக்கு இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை உண்டாகிறது. ஏற்கனவே ஹைப்பர்டென்ஷனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காபி பருகுவதால் இரத்த அழுத்தம் மேலும் அதிகரிக்கலாம்.
காஃபின் ஒவ்வொரு நபரையும் ஒவ்வொரு விதமாக பாதிக்கிறது. நீங்கள் ஏதேனும் எதிர்மறை பக்க விளைவுகளை எதிர்கொண்டால் அதற்கு ஏற்ற விதத்தில் காபி பருகும் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். காபியில் உள்ள காஃபின் தாக்கம் குறைய குறைந்தது 6 மணி நேரம் எடுக்கும் என்பதால் காலை நேரத்தில் காபி பருகுவதை குறைத்துக் கொள்ளலாம் அல்லது காஃபின் அற்ற காபி பருகலாம். திடீரென்று காபி பருகுவதை கைவிட வேண்டாம். இதனால் தீவிர தலைவலி, தசை வலி , சோர்வு போன்றவை அடுத்த சில நாட்கள் நீடிக்கலாம். எனவே காபி பருகுவதை கைவிட நினைத்தால் கொஞ்சம் கொஞ்சமாக கைவிடுங்கள்.
ஆரோக்கியமான முறையில் காபி பருகுவது எப்படி?
எவ்வளவு காபி பருகுவது ஆரோக்கியமானது , எவ்வளவு காபி பருகுவது ஆபத்தானது என்ற கேள்வி அடுத்தது உங்களுக்கு எழலாம். 8 அவுன்ஸ் காபி கப்பில் ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை காபி பருகுவது மிதமான அளவு என்று அறியப்படுகிறது. 4 கப் காபிக்கு அதிகமாக பருகுவது அதிக அளவு காபி பருகுவதாக அறியப்படுகிறது. 8 அவுன்ஸ் காபியில் 80 முதல் 200மிகி அளவு காஃபின் சேர்க்கப்படலாம். சர்க்கரை சேர்க்கப்பட்ட காபிக்கு மாற்றாக ப்ளாக் காபி பருகலாம். எதுவாக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் அது நஞ்சு தானே. அதனால் சரியான அளவில் காபி பருகுங்கள். ஆரோக்கியமாக இருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக