நம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்த
வாகையில், இனிப்பான உணவுகளை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது
இந்த பதிவில் சுவையான இனிப்பு தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- ரவை – 2 டம்ளர்
- மைதா – ஒரு டம்ளர்
- சீனி – 1 1/2 டம்ளர்
- முட்டை – 2
- தேங்காய் – கால் மூடி
- ஏலக்காயாய் – 4
- முந்திரி – 20
- நெய் – 2 தேக்கரண்டி
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – சிறிதளவு
செய்முறை
இனிப்பு தோசை செய்வதற்கு தேவையான
அணைத்து பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் தேங்காய் மற்றும்
ஏலக்காயை மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும்.
முந்திரியை நான்கு துண்டாக உடைத்து
நெய்யில் வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அகலமான பாத்திரத்தில் ரவை, மைதா,
சீனி, முட்டை, உப்பு, அரைத்த தேங்காய், வறுத்த முந்திரி போட்டு தோசை மாவு
பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அடுப்பில் தவாவை வைத்து, காய்ந்ததும்
தோசையாக ஊற்ற வேண்டும். பின் எண்ணெயில் திருப்பி போட்டு இருப்பக்கமும் வெந்த பிறகு
எடுக்க வேண்டும். இப்பொது சுவையான இனிப்பு தோசை தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக