Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 20 பிப்ரவரி, 2020

2020 ஃபோர்டு ஃபிகோ, ஏஸ்பையர் & ஃப்ரீஸ்டைல் பிஎஸ்-6 கார்கள் அறிமுகம்..!

ந்தியாவில் விற்பனையாகும் பிரபல கார்களின் பிஎஸ்-6 மாடல் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது ஃபோர்டு நிறுவனம். அதுதொடர்பான தகவல்களை விரிவாக பார்க்கலாம்.


ஃபோர்டு இந்தியா நிறுவனம் பிஎஸ்-6 விதிகளுக்குட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள புதிய ஃபிகோ, ஏஸ்பையர் மற்றும் ஃப்ரீஸ்டைல் மாடல்களை கார்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

அதன்பாடி ஃபோர்டு ஃபிகோ காருக்கு ரூ. 5.39 லட்சமும், ஃப்ரீஸ்டைல் மாடலுக்கு ரூ. 5.89 லட்சமும், ஏஸ்பையர் பிஎஸ்6 மாடலுக்கு ரூ. 5.99 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள விலை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.


புதிய ஃபோர்டு ஃபிகோ பிஎஸ்6 மாடலுக்கு ரூ. 5.39 லட்சம் ஆரம்ப விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிஎஸ்4 வெர்ஷனை விட, பிஎஸ்6 மாடலுக்கு ரூ. 16 ஆயிரம் கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதனுடைய உயர் ரக டைட்டானியம் ப்ளூ வேரியன்ட் மாடல் பிஎஸ் 4 வெர்ஷனை விட ரூ. 31 ஆயிரம் வரை கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த வேரியன்ட் ரூ. 7.54 லட்சத்தில் இருந்து ரூ. 7.85 லட்சம் வரை விலை உயர்வை பெற்றுள்ளது. விலை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம், இந்தியா மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு ஃபிகோ- 1.21 Ti-VCT பெட்ரோல்:
வேரியன்டுகள்
புதிய விலை (பிஎஸ்6)
பழைய விலை (பிஎஸ்4)
ஆம்பியன்ட்
ரூ. 5.39 லட்சம்
ரூ. 5.23 லட்சம்
டிரென்ட் (புதிய வேரியன்ட்)
ரூ. 5.99 லட்சம்
NA
டைட்டானியம்
ரூ. 6.35 லட்சம்
ரூ. 5.99 லட்சம்
டைட்டானியம் ப்ளூ
ரூ. 6.95 லட்சம்
ரூ. 6.64 லட்சம்

ஃபோர்டு ஃபிகோ- 1.5l TDCi டீசல்:
வேரியன்டுகள்
புதிய விலை (பிஎஸ்6)
பழைய விலை (பிஎஸ்4)
டிரென்ட்
ரூ. 6.68 லட்சம்
NA
டைட்டானியம்
ரூ. 7.25 லட்சம்
ரூ. 6.89 லட்சம்
டைட்டானியம் ப்ளூ
ரூ. 7.85 லட்சம்
ரூ. 7.54 லட்சம்


இதற்கிடையில் பிஎஸ்-6 அப்டேட்டை தொடர்ந்து ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் மற்றும் ஏஸ்பையர் கார்கள் விலை சற்று குறைந்துள்ளது. அவற்றில் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காருக்கு ரூ. 5.89 லட்சம் முதல் ரூ. 8.19 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முந்தைய வெர்ஷனை விட இந்த புதிய மாடலுக்கு ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 37 ஆயிரம் வரை விலை குறைப்பு நடந்துள்ளது.

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் 1.2l Ti-VCT பெட்ரோல்:
வேரியன்டுகள்
புதிய விலை (எபிஸ்6)
பழைய விலை (எபிஸ்4)
ஆம்பியன்ட்
ரூ. 5.89 லட்சம்
ரூ. 5.91 லட்சம்
டிரென்ட்
ரூ. 6.44 லட்சம்
ரூ. 6.81 லட்சம்
டைட்டானியம்
ரூ. 6.94 லட்சம்
ரூ. 7.21 லட்சம்
டைட்டானியம்+
ரூ. 7.29 லட்சம்
ரூ. 7.56 லட்சம்

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் 1.5l TDCi டீசல்:
வேரியன்டுகள்
புதிய விலை (எபிஸ்6)
பழைய விலை (எபிஸ்4)
டிரென்ட்
ரூ. 7.34 லட்சம்
ரூ. 7.45 லட்சம்
டைட்டானியம்
ரூ. 7.84 லட்சம்
ரூ. 7.90 லட்சம்
டைட்டானியம்+
ரூ. 8.19 லட்சம்
ரூ. 8.36 லட்சம்

மேலும் பிஎஸ்4 வெர்ஷனுடன் ஒப்பிடும் போது, ஃபோர்டு ஏஸ்பையர் பிஎஸ்6 காருக்கு ரூ. 4 ஆயிரம் முதல் ரூ. 38 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி புதிய ஏஸ்பையர் காரின் ஆரம்ப விலை ரூ. 5.99 லட்சமாக உள்ளது. இதனுடைய உயர் ரக மாடலுக்கு ரூ. 8.34 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம், டெல்லி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு ஏஸ்பையர் 1.2l Ti-VCT பெட்ரோல்:
வேரியன்டுகள்
புதிய விலை (பிஎஸ்6)
பழைய விலை (பிஎஸ்4)
ஆம்பியன்ட்
ரூ. 5.99 லட்சம்
ரூ. 598,500 லட்சம்
டிரென்ட்
ரூ. 6.59 லட்சம்
ரூ. 663,400 லட்சம்
டைட்டானியம்
ரூ. 709,000 லட்சம்
ரூ. 737,400 லட்சம்
டைட்டானியம்+
ரூ. 7.44 லட்சம்
ரூ. 782,400 லட்சம்

ஃபோர்டு ஏஸ்பையர் 1.5l TDCi டீசல்:
வேரியன்டுகள்
புதிய விலை (பிஎஸ்6)
பழைய விலை (பிஎஸ்4)
டிரென்ட்
ரூ. 7.49 லட்சம்
ரூ. 737,400 லட்சம்
டைட்டானியம்
ரூ. 7.99 லட்சம்
ரூ. 817,400 லட்சம்
டைட்டானியம்+
ரூ. 8.34 லட்சம்
ரூ. 862,400 லட்சம்

ஃபோர்டு நிறுவனத்தின் இந்த மூன்று பிஎஸ்6 கார்களிலும் 1.2 லிடடர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த பெட்ரோல் எஞ்சின் கார் 95 பிஎச்பி பவர் மற்றும் 119 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும்.1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மூலம் 100 பிஎச்பி பவர் மற்றும் 215 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும். இந்த இரண்டு எஞ்சின்களிலும் ஸ்டான்டர்டாக 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கார்கள் பிஎஸ்-6 மாடலுக்கு ஏற்றவாறு அப்டேட் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. அதை தவிர்த்து இந்த கார்களுக்கு புதிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. முந்தைய பிஎஸ்-4 மாடலில் இடம்பெற்றிருக்கும் அதே சிறப்பம்சங்கள் இந்த புதிய மாடலிலும் தொடர்கிறது.

புதிய மாசு உமிழ்வுக்கு ஏற்றவாறு அப்டேட் செய்யப்பட்டுள்ள ஃபிகோ, ஃப்ரீஸ்டைல் மற்றும் ஏஸ்பையர் போன்ற ஃபோர்டு கார்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதை தொடர்ந்து பிஎஸ்6 மாடல் ஈகோஸ்போர்ட் எஸ்யூவி கார் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக