Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 20 பிப்ரவரி, 2020

திருப்பூர் பேருந்து விபத்து தொடர்பாக இப்படியொரு ட்விட் போட்ட பிரதமர் மோடி!

மிழகம் மற்றும் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் திருப்பூர் பேருந்து விபத்து சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு கேரள அரசுப் பேருந்து ஒன்று நேற்று இரவு புறப்பட்டுச் சென்றது. இதில் 48 பயணிகள் இருந்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பேருந்து வந்து கொண்டிருந்தது.

அதிகாலை 3.15 மணியளவில் பயணிகள் அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். அதேசமயம் கோவையில் இருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்களை ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது. நான்கு வழிச் சாலை என்பதால் லாரியை வேகமாக ஓட்டுநர் இயக்கியுள்ளார்.

அவிநாசி அருகே போன போது லாரியின் டயர் வெடித்துள்ளது. அதாவது அதிக பாரம் ஏற்றிச் சென்றதால் வெடித்திருக்கலாம் என்றும், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி டயர் வெடித்திருக்கக் கூடும் என்றும் கூறுகின்றனர்.

 இதனால் சாலையின் மறுபுறம் சென்று லாரி கவிழ்ந்துள்ளது. அதே நேரத்தில் கேரள அரசுப் பேருந்தும் வந்ததால் அதன் மீது அப்படியே லாரி விழுந்துள்ளது. இதில் பேருந்தின் வலது பக்கம் முழுவதும் நொறுங்கியது.

அந்தப் பகுதியில் இருந்த பயணிகள் பலரும் பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநரும் பலியாகி இருக்கின்றனர். பேருந்து விபத்தில் படுகாயம் அடைந்து சிக்கிக் கொண்ட மக்கள் அலறித் துடித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் பயணிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பலரின் உடல் அங்கங்கள் துண்டிக்கப்பட்டு கிடந்தது காண்போரை அதிர்ச்சியில் உறையச் செய்தது.

 ஜன்னல்களை உடைத்து பேருந்துக்குள் சிக்கியவர்களை மீட்டனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஐ தாண்டியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக பிரதமர் மோடி அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Extremely anguished by the bus accident in Tamil Nadu’s Tiruppur district. In this hour of grief, my thoughts and p… https://t.co/0pZlytSsjP
— PMO India (@PMOIndia) 1582182699000

அதில், தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் நடந்த பேருந்து விபத்து மிகுந்த வேதனையை அளிக்கிறது. இந்த சோகமான தருணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்கிறேன். அவர்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

அதேசமயம் காயத்தில் அவதிப்படுவோர் விரைவில் குணமடைந்து வருவார்கள் என்று நம்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக