Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

சுக்கிர மேடு உங்களைப் பற்றி என்ன சொல்கிறது?

Image result for சுக்கிர மேடு


சுக்கிரமேடு என்பது கட்டை விரலுக்கு அடிப்பாகத்தில் இருக்கும். இந்த மேடு கையில் நன்றாக அமைந்திருந்தால் நடுத்தர உயரமாக இருப்பார்கள். பிறரைக் கவரக்கூடிய தோற்றம் கொண்டவராக இருப்பார்கள். 

குணநலன்கள் :
 சுக்கிர மேடு சிறப்பாக அமைந்திருந்தால் அன்பு, பாசம் நிறைந்தவர்களாகவும், இரக்கம் உடையவர்களாகவும், உயர்ந்த ரசனை உள்ளவர்களாகவும், சுறுசுறுப்பானவர்களாகவும், உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
 இவர்கள் சிக்கனமாக செலவு செய்யக்கூடியவர்கள்
 எதிலும் புதுமையை விரும்புபவர்கள். திடீரென்று கோபம் கொள்ளக்கூடியவர்கள்.
 தவறு செய்துவிட்டால் உடனே மன்னிப்பு கேட்டு விடுவார்கள். எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசுவார்கள்
 மற்றவர்களை அடிமைப்படுத்த நினைப்பார்களே தவிர அடிமையாக இருக்க விரும்பமாட்டர்கள்.
 இவர்களிடம் அன்பால் தான் எதையும் சாதிக்க முடியும். பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை உடையவர்கள்.
 எத்தனை துன்பங்கள் வந்தாலும் தாங்கிக்கொள்வார்கள். சிரிக்கும் படியும், சிந்திக்கும் படியும் பேசுவார்கள்.
சுக்கிரமேடு சீர்கெட்டு இருந்தால், இடம்பெயர்ந்து மோசமாக இருந்தால் வஞ்சகர்களாகவும், வேடிக்கைகாரர்களாகவும், பொறாமை உடையவர்களாகவும் இருப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!