Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

உங்களது கட்டை விரல் எந்த மாதிரி இருக்கு?

Image result for கட்டை விரல்

 வ்வொரு கையிலும் ஐந்து விரல்கள் காணப்படும். இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. உள்ளங்கையில் மற்ற நான்கு விரல்களுடன் சேராமல் தனித்து நிற்கும் விரல் கட்டை விரல் எனப்படும்.

 இந்த கட்டை விரல் மற்ற விரல்களை விட பெரியதாக பலம் பொருந்தியதாக இருப்பதால் இதற்கு பெரு விரல் என்ற பெயரும் உண்டு. இந்த விரலின் அடியில் சுக்கிர மேடு இருப்பதால் இது சுக்கிரன் விரல் என்றும் கூறப்படுவதுண்டு.

 கட்டை விரலின் முதல் பகுதி மனப்பாங்கையும், அதன் இரண்டாம் பகுதி பகுத்தறியும் தன்மையையும் குறிக்கிறது. பகுத்தறியும் பகுதி அளவில் சிறியதாகவும், முதல் பகுதி அளவில் பெரியதாகவும் இருந்தால் அவர்கள் வீண் பேச்சும், ஆடம்பரமும் உடையவர்கள்.

 இரண்டு பகுதிகளும் சமமான அளவில் இருப்பது நல்லது. அப்படி சமமாக இருந்து இரண்டாவது பகுதி இடை போல் அழகாய் அமைந்து இருந்தால் இவர்கள் நம்பகமானவர்களாகவும், அறிவாற்றல் மிகுந்தவர்களாகவும் நல்லவர்களுக்கு உதவுபவர்களாகவும், நியாயம், நீதி, நேர்மை இவற்றுக்காக பாடுபடுபவர்களாகவும் அதற்காகத் தியாகம் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

 கட்டை விரலானது மற்ற விரல்களைப் போல உயரமாக உறுதியாக அமைந்திருக்குமானால் சற்று மந்தமாக இருப்பார்கள். சுற்றியுள்ள காலச் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள்.

 மற்ற எல்லா விரல்களை விட கட்டை விரலானது பெரியதாக இருந்தால் எல்லாவித கஷ்டங்களையும் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர்களாக விளங்குவார்கள். நல்ல புத்திசாலிகளாகவும் விளங்குவார்கள்.

 கட்டை விரலானது மற்ற எல்லா விரல்களையும் விட உயர்ந்து இருந்தால் எழுத்தாளர்கள், கவிஞர்களாக இருப்பார்கள். பத்திரிக்கை சம்பந்தமான தொழில் செய்வார்கள்.

 கட்டை விரல் குட்டையாக இருந்தால் அறிவாளிகள், கற்பனை திறன் உள்ளவர்கள். பிறர் மேல் இரக்கப்படுபவர்கள், புகழ் சேர்ப்பதில் வல்லவர்கள்.

 மிகச்சிறிய கட்டை விரலைப் பெற்றவர்கள் மன உறுதியற்றவர்கள். எல்லாவற்றையும் நம்புவார்கள். சிந்திக்க மறுப்பவர்கள். இதனால் கஷ்டங்களுக்கு ஆளாவார்கள்.

 அதிகமாக வளையும் கட்டை விரலைப் பெற்றவர்கள் எளிமையை விரும்ப மாட்டார்கள். நல்லவர்கள், பிறரை மதிப்பவர்கள், சகிப்புத் தன்மை உடையவர்கள்.

ஓரளவு வளையும் கட்டை விரல் கொண்டவர்கள் பிறருக்கு உதவுவதில் விருப்பம் உள்ளவர்கள். கற்பனை செய்வதில் வல்லவர்கள். தேவையான விஷயத்துக்கு மட்டுமே பணத்தை செலவு செய்பவர்கள். உணர்ச்சி பூர்வமானவர்கள். பொறுமையானவர்கள். பிறர் யோசனையைக் கேட்காதவர்கள். மன உறுதி உள்ளவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக