சியாமி நிறுவனத்தில் இருந்து ஸ்மார்ட்ஃபோன் வாங்கி
இருப்போம். டிவி வாங்கி இருப்போம். இன்னும் பல வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி
இருப்போம்.
ஆனால் பல் துலக்கப்
பயன்படுத்தும் பிரஷ்ஷை வாங்கி இருக்கிறீர்களா..? இனி வாங்கலாம், சியாமி ஒரு புதிய
ஸ்மார்ட் டூத் பிரஷ்ஷை, இந்தியாவில் கொண்டு வந்து இருக்கிறார்கள்.
பிப்ரவரி 20
இந்த டூத் பிரஷ்ஷின்
பெயர் Mi Electric Toothbrush T300. கடந்த பிப்ரவரி 20, 2020 அன்று தான் சியாமி
நிறுவனம் தன் புதிய ஸ்மார்ட் டூத் பிரஷ்ஷை, இந்தியாவுக்குக் கொண்டு வந்தார்கள்.
ஏற்கனவே சியாமி நிறுவனம், தன் ஸ்மார்ட் டூத் பிரஷ்ஷை ஸ்பெயின் நாட்டில் விற்றுக்
கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் எப்போது
இந்த புதிய ஸ்மார்ட்
டூத் பிரஷ்ஷின் விலை 1,299 ரூபாயாம். முழுமையாக இந்தியாவின் சில்லறை சந்தைக்கு
மார்ச் 10 முதல் வருமாம். ஸ்பெயின் நாட்டில் விற்பனை ஆகும் இந்த ஸ்மார்ட் டூத்
பிரஷ்-ஷைப் போல இல்லாமல், இந்தியாவுக்காக தயாரிக்கப்படும் ஸ்மார்ட் டூத் பிரஷ்-ல்
வாய் சுத்தம் சார்ந்த டேட்டா அல்லது அப்ளிகேஷன் கனெக்டிவிட்டி எல்லாம் இல்லையாம்.
வசதிகள்
இந்த பிரஷ் IPX7
water-resistant வசதி கொண்டதாம். எனவே, பிரஷ்ஷை தைரியமாக தண்ணீரில் கழுவலாமாம்.
இந்த ஸ்மார்ட் டூத் பிரஷ் வெள்ளை நிறத்தில் மட்டும் தான் கிடைக்கிறதாம். இந்த
ஸ்மார்ட் டூத் பிரஷ்-ன் மேல் பகுதி (பல் துலக்கும் பகுதி) மனிதர்களின் வாய்க்கு
தகுந்தாற் போல தயாரித்து இருக்கிறார்களாம்.
வாய்ல வெச்சா போதும்
இந்த ஸ்மார்ட் டூத் பிரஷ்-ஷை
வாயில் வைத்து பட்டனைத் தட்டினால் போதும். அந்த பிரஷ்ஷில் இருக்கும் magnetic
levitation sonic motor மற்றதைப் பார்த்துக் கொள்ளும். ஒரு நிமிடத்துக்கு 31,000
அசைவுகளை இந்த பிரஷ்ஷே செய்யும். நாம் வெறுமனே வாயில் எந்த பகுதியில் தேய்க்கப்பட
வேண்டுமோ அந்த பகுதியில் பிரஷ்ஷை வைத்தால் போதும். நாம் முன் பின் அசைக்க வேண்டும்
என அவசியம் இல்லை.
பிரஷ்ஷின் முறை
பிரஷ் நம் பல்லை
துலக்கும் விதத்தைக் கூட நாமே தீர்மானிக்கலாமாம். Standard மற்றும் Gentle என
இரண்டு வகையில் பல் துலக்குமாம். இதில் எதை வேண்டுமானாலும் நாமே தேர்வு செய்து
கொள்ளலாமாம். ஆக அழுத்தித் தேய்கச் சொல்லலாம் அல்லது வழக்கமாகத் தேய்க்கச்
சொல்லலாம். அது உங்கள் கையில். ஆனால் நீங்கள் தேய்க்க வேண்டிய அவசியம் இல்லை.
சார்ஜ் செய்வது
இந்த ஸ்மார்ட் டூத்
பிரஷ்-ஷை ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் சுமாராக 25 நாட்கள் வரை வருமாம். அதன் பிறகு
சார்ஜ் செய்து கொள்ள வேண்டும். மேலே பல் துலக்கும் பகுதியை மட்டும் தனியாக
மாற்றிக் கொள்ளலாமாம். இந்த மேல் பகுதியைத் தொடர்ந்து பயன்படுத்தினால் சுமார் 4
மாத காலம் வரை வரும் எனச் சொல்லி இருக்கிறார்கள். குறிப்பாக நாம் வாங்கும்
ஸ்மார்ட் டூத் பிரஷ்-க்கு ஒரு வருடம் வாரண்டியும் கொடுக்கிறார்கள்.
பங்கு விலை
இந்திய ஸ்மார்ட்ஃபோன்
சந்தையில் தட்டித் தூக்கும் சியாமி, தற்போது வீட்டு உபயோகப் பொருட்கள் சந்தையிலும்
தலையை நுழைக்கத் தொடங்கி இருக்கிறது. இருப்பினும் பங்குச் சந்தை, சியாமியின் இந்த
ஸ்மார்ட் டூத் பிரஷ்-ஷை பெரிய அளவில் வரவேற்கவில்லை என்று தான் தெரிகிறது. கடந்த
ஐந்து நாட்களில் சியாமி பங்கு விலை தொடர்ந்து சரிந்து கொண்டு தான் இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக