Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

ஆஸ்துமா, இருமல் மற்றும் சளிக்கு உடனடி தீர்வு

ஆஸ்துமா, இருமல் மற்றும் சளிக்கு உடனடி தீர்வு 

 ஆடாதொடை மணப்பாகு

தேவையாக பொருட்கள்
  • ஆடாதொடை இலை – 1200 கிராம்
  • பனஞ்சர்க்கரை – 2400 கிராம்
  • சித்தரத்தை – 100 கிராம்
  • மிளகு – 50 கிராம்
  • சுக்கு – 50 கிராம்
  • இலவங்கம் – 25 கிராம்
  • புதினா உப்பு – 2 கிராம்
  • நெய் – 50 மில்லி
செய்முறை
ஆடாதொடை இலைகளை நன்றாக கழுவி துண்டு துண்டாக வெட்டி வைக்கவும். 

ஒரு கடாயில் நெய் விட்டு ஆடாதொடை இலைகளை போட்டு வதக்கவும். 

நல்ல மணம் வந்தவுடன் மிளகு, சுக்கு, சித்தரத்தை, இலவங்கம் இவைகளை தட்டிப் போட்டு 6 லிட்டர் தண்ணீர் விட்டு சுமார் 1.5 லிட்டாராக குறுக்கி வடிகட்டி பனஞ்சர்க்கரையை போட்டு பாகுபதம் வந்ததும் இறக்கி பத்திரப் படுத்தவும். 

கடைசியாக புதினா உப்பை சேர்த்து நன்றாக கலக்கி காற்று புகாத பாட்டிலில் அடைக்கவும்.

அளவு

5 மில்லி முதல் 10 மில்லி வரை வெந்நீரில் கலந்து குடிக்கவும்.

பயன்கள்

தொண்டை கட்டு, ஆஸ்துமா, இருமல், குரல் மாற்றம், தலைவலி, ஒற்றை தலைவலி, நுரையீரலில் உள்ள சளியை கரைக்கும், குழந்தைகளுக்கு ஏற்படும் சளியை கரைத்து வெளியேற்றும்.

ஆஸ்துமாவிற்கு மருந்து எடுப்பவர்கள் இதனோடு கரிசாலை கற்பம் அல்லது சீந்தில் சூரணம் சேர்த்து எடுக்க நோய் எதிர்ப்பு திறன் கூடி உடல் ஆரோக்கியம் பெருகும்.ஆங்கில மருத்துவத்தில் உள்ள Syrup- களை விட வேகமாக தீர்வை தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக