Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

தந்தையால் பலாத்காரம் செய்யப்பட்ட காதலிக்கு தாலி கட்டிய மகன்..! அமமுக பிரமுகர் கைது...

நாகை அருகே மகனின் காதலியை மிரட்டி பலாத்காரம் செய்த அமமுக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த செம்போடை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நித்யானந்தம் (எ) கருப்பு நித்யானந்தம் (45). இவருடைய மகன் முகேஷ் கண்ணன் (20). இவர் உள்ளூரில் உள்ள கல்லூரியில் ஐடிஐ படித்து வந்தார். இந்த நிலையில் முகேஷும் அவருடன் படித்து வந்த மாணவியும் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர். படிப்பு முடிந்த நிலையில் இருவருக்கு சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை கிடைத்துள்ளது.

சென்னைக்கு விரைந்த அவர்கள் தனித்தனியே விடுதி எடுத்து தங்கி வேலை பார்த்தனர். இந்த நிலையிதான் முகேஷ் தனது காதல் விவகாரத்தை வீட்டில் தெரியப்படுத்தியுள்ளார். ஆனால் இதற்கு முகேஷின் வீட்டில் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. காதல் கைகூடுமா என்ற ஏக்கத்தில் இருந்த முகேஷின் காதலிக்கு தொடர்பு கொண்ட நித்யானந்தம் ' என் மகனின் திருமணத்தை குறித்து உன்னுடன் விவாதிக்க வேண்டும், உடனே கிளம்பி செம்போடைக்கு வா என கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த பெண்ணும் நித்யானந்தனுடைய வீட்டுக்கு சென்றுள்ளார். அங்குதான் நிலைமை தலைகீழானது. சம்பத்தன்று நித்யானந்தாவை தவிர வேறு யாரும் அங்கில்லை. அந்த பெண் வீட்டுக்குள் நுழைந்ததும் கதவை சாத்திக்கொண்ட நித்யானந்தா, பெண்ணிடம் இருந்த செல்போனை முதலில் பறித்துள்ளார். பின்னர் பலவந்தமாக தான் வைத்திருந்த தாலியை பெண்ணுக்கு கட்டி, சத்தம் போட்டால் குத்தி கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

பின்னர் கத்தி முனையில் அப்பெண்ணை வீட்டினுள் இருந்த மற்றொரு அறைக்கு இழுத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார் நித்யானந்தா. அந்த காமுகனால் அங்கு இரண்டு நாட்களும், பின்னர் அவுரிக்காட்டில் இருக்கும் சக்திவேல் என்பவரது வீட்டில் இரண்டு நாட்கள் என அப்பெண் அடைத்து வைக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தை அறிந்து அவுரிக்காட்டுக்கு வந்த முகேஷ் கண்ணன், காதலியின் நிலைமையை கண்டு கதறி அழுத நிகழ்வு விவரிக்கமுடியாதது.

இதையடுத்து காதலியை அழைத்துக்கொண்டு வேதாரண்யம் டிஎஸ்பி அலுவுலகத்து சென்ற முகேஷ், தந்தையின் கோர செயலை பற்றி புகார் அளித்தார். பின்னர் டிஎஸபியின் அறிவுறுத்தலால் மகளிர் காவல் நிலையத்தில் நித்யானந்தா மீது வழக்கு செய்யப்பட்டது.

பின்னர் விசாரணையில் இறங்கிய போலீசார் நித்யானந்தா, அவுரிக்காட்டைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவி வள்ளி ஆகிய மூவரையும் கைது செய்தனர். வாழ்க்கையே முடிந்தது என்ற விரக்தியில் இருந்த காதலியை அன்று இரவே முகேஷ் ஊர் மக்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். தந்தையை சிறைக்கு அனுப்பி, காதலித்த பெண்ணை கரம்பிடித்த முகேஷின் செயல் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக