சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா
வைரஸ் வெகுவாக பரவி அந்நாட்டு மக்களை கொன்று வருகிறது. சீனா மட்டுமின்றி அண்டை
நாடுகளிலும் இந்தியா உள்பட வெளிநாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் பரவி வருகிறது
என்பதால் உலக நாடுகளே இந்த கொரோனா வைரசால் அச்சத்தில் உள்ளன
இந்த
நிலையில் கொரோனா வைரஸ் முதல் முதலாக பரவ ஆரம்பித்த சீனாவின் வூகான் மாகாணத்தில்
நேற்று பிறந்த குழந்தை ஒன்றுக்கு இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
அந்த
குழந்தையின் தாய் கர்ப்பமாக இருக்கும் போதே கொரோனா வைரஸ் அவருக்கு தாக்கியதாகவும்
இதனையடுத்து அந்த வைரஸ் குழந்தைக்கும் பரவியதாகவும் கூறப்படுகிறது இதனை அடுத்து
குழந்தைக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
பிறந்த
மறுநாளே கொரோனா வைரசுக்கு ஒரு பச்சிளங்குழந்தை தாக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி
உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக