வோடபோன் கோரிக்கையை உச்சநீதிமன்றம்
நிராகரித்ததையடுத்து இதுபோல் அழுத்தம் கொடுத்தால் வோடபோன் நிறுவனத்தை மூடுவதை தவிர
வேறு வழியில்லை என அந்த நிறுவனத்தின் முக்கிய நபர் தெரிவித்துள்ளார்.
ஸ்பெக்ட்ரம்'
எனப்படும் அலைக்கற்றை
மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள்
அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 'ஸ்பெக்ட்ரம்' எனப்படும் அலைக்கற்றை அளவுக்கு ஏற்ப
பயன்பாட்டுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். மொபைல் போன் மற்றும் தொலைத் தொடர்பு
சேவையின் மூலம் கிடைக்கும் வருவாயைத் தவிர மற்ற வழிகளில் கிடைக்கும் வருவாயையும்
ஏ.ஜி.ஆர்., கணக்கில் சேர்க்க வேண்டும் என விதிமுறைகள் விதிக்கப்பட்டது.
மொத்தம்
1.33 லட்சம் கோடி நிலுவை
அதன்படி, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா
மற்றும் பிற தொலைதொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய உரிம
கட்டணமான ரூ.92 ஆயிரம் கோடி மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணமான ரூ. 41
ஆயிரம் கோடி என மொத்தம் 1.33 லட்சம் கோடி நிலுவையில் இருந்தது.
வரலாறு
காணாத நஷ்டம்
வோடபோன், ஐடியா கடும் நஷ்டத்தை
சந்தித்துள்ளது. நடப்பு ஆண்டிற்கான இரண்டாவது காலாண்டில் மட்டும் வோடபோன் ஐடியா
நிறுவனம் ரூ.50 ஆயிரத்து 922 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறியுள்ளது. அண்மைக்
காலக்கட்டத்தில் எந்த ஒரு நிறுவனமும் இவ்வளவு நஷ்டத்தை சந்தித்தது இல்லை.
ஏர்டெல்
நிறுவனமும் நஷ்டம்
ஏர்டெல் நிறுவனமும் இதுவரை இல்லாத
அளவிற்கு இரண்டாம் காலாண்டில் 23 ஆயிரத்து 45 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக
தெரிவித்துள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்த
வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் கடும் நெருக்கடி சந்தித்து வருவதாக ஏர்டெல்
நிறுவனம் கூறியுள்ளது.
உச்சநீதிமன்றம்
அதிரடி உத்தரவு
இந்த நிலுவைத் தொகையை ஜனவரி 20ம் தேதிக்குள்
செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால்
உச்சநீதிமன்ற உத்தரவை பொருட்படுத்தாத வகையில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் எந்த
தொகையையும் செலுத்த வில்லை. இதையடுத்து இந்த மனு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான
அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நிலுவைத் தொகையை
வசூலிக்குமாறு உத்தரவிட்டிருந்தும் அதனை மதிக்காத தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு
நீதிபதிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். நிலுவைத் தொகையை, அடுத்த விசாரணை
நடைபெறும் மார்ச் 17ம் தேதிக்குள் செலுத்திவிட வேண்டும் என்று தொலைத் தொடர்பு
நிறுவனங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உடனடியாக
தொகையை செலுத்துங்கள்
இதையடுத்து, நிலுவைத் தொகையை உடனடியாக
செலுத்துமாறு தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை
சுற்றறிக்கை அனுப்பியது. அதில் மேற்கண்ட தொகையை நேற்றிரவுக்குள் செலுத்த வேண்டும்
என உத்தரவிட்டிருந்தது
பாரதி
ஏர்டெல் பதில்
இந்நிலையில், வரும் 20-ஆம் தேதிக்குள்
10 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்தி விடுவதாகவும், எஞ்சிய தொகையை மார்ச் 17ம்
தேதிக்குள் செலுத்தி விடுவதாகவும் பாரதி ஏர்டெல் நிறுவனம் பதிலளித்திருந்தது.
வோடபோன்
கோரிக்கை
இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி
அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வோடபோன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல்
ரோத்தகி, வோடபோன் நிறுவனம் இன்று (திங்கட்கிழமை) ₹2,500
கோடி செலுத்துவதாகவும், மேலும் ₹1,000 கோடியை வரும்
வெள்ளிக்கிழமை செலுத்துவதாகவும் கூறி, நிறுவனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை
எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். ஆனால், இவரது கோரிக்கையை நீதிபதிகள்
நிராகரித்து விட்டனர். நிலுவைத் தொகையை முழுவதுமாக செலுத்த வேண்டும் என்பதில்
உச்சநீதிமன்றம் உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வோடபோன்
நிறுவனத்தின் மூத்த ஆலோசகர்
இந்த நிலையில் என்டிடிவி
தொலைக்காட்சிக்கு வோடபோன் நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் முகுல் ரோஹத்கி பேட்டி
அளித்தார். அதில், வோடபோன் நிறுவனம் கடந்த 10 வருடங்களில் மட்டும் 2 லட்சம் கோடி
ரூபாய்க்கும் மேல் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்தார். இந்த தொகையை ஒரே இரவில்
அரசுக்கு செலுத்த வேண்டும் என்றால் நிறுவனத்தை இழுத்து மூட வேண்டியது இருக்கும்
எனவும் தெரிவித்தார்.
இழுத்து
மூடினால் மிகப்பெரிய விளைவு ஏற்படும்
மேலும் வோடபோன் நிறுவனத்தை மூடும் நிலை
ஏற்பட்டால் 10 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை இழக்க நேரிடும் எனவும் 30 கோடி
வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்தை சந்திக்க நேரிடும் எனவும் கூறினார். வோடபோன்
நிறுவனம் அரசுக்கு மொத்தம் ரூ.7000 கோடி செலுத்த வேண்டாம். ஆனால் இதற்கான வட்டி,
இந்த தொகையை செலுத்த தவறியதற்கு விதிக்கப்பட்ட அபராதம், அந்த அபராதத் தொகைக்கான
வட்டி என மொத்தம் ரூ.23 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.25 கோடி வரை செல்கிறது என
குறிப்பிட்டார்.
அரசுக்கு
பெரிய அழுத்தம் வரும்
இந்த தொகையை உத்தரவு போல் ஒரே இரவில்
செலுத்த இயலாது, அப்படி செலுத்த வேண்டும் என்றால் நிறுவனத்தை இழுத்து மூட வேண்டியிருக்கும்.
அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் இல்லையெனில் பெரிய அழுத்தத்தை சந்திக்க
நேரிடும் எனவும் சுட்டிக் காட்டி பேசினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக