![Image result for பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.446.52 கோடி... மக்களவையில் தகவல்...](https://img.dailythanthi.com/Articles/2020/Mar/202003050229264658_Prime-Minister-Modis-overseas-travel-expenditure-is-Rs_SECVPF.gif)
இந்திய பிரதமர் மோடியின் வெளிநாட்டு
பயணம் தொடர்பாக பாராளுமன்றத்தின் மேலவையான மக்களவையில் உறுப்பினர்களால்
கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் முரளிதரன்
பதிலளித்து பேசினார்.
அந்த பதிலில், கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர்
மோடியின் வெளிநாட்டு பயணத்துக்காக தற்போது வரை ரூ.446.52 கோடி செலவு
செய்யப்பட்டுள்ளதுஎன்றும், இதில் விமான செலவுகளும் அடங்கும் என்றும்
தெரிவித்தார்.மேலும் அவர் அளித்த தகவலில்,
- கடந்த 2015-16-ம் ஆண்டில் ரூ.121.85 கோடியும்,
- 2016-17-ஆம் ஆண்டில் ரூ.78.52 கோடியும்,
- 2017-18-ஆம் ஆண்டில் ரூ.99.90 கோடியும்,
- 2018-19-ஆம் ஆண்டில் ரூ.100.02 கோடியும்,
- 2019-20-ஆம் ஆண்டில் ரூ.46.23 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக அவர் அளித்த தகவளில் தெரிவிக்கப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக