Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 31 மார்ச், 2020

5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்


Redmi Note 9S

சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 9 சீரிஸில் இன்னொரு ஸ்மார்ட்போன் மாடலை கொண்டுவருகிறது, அதன்படி ரெட்மி நோட் 9எஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது சியோமி, இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஏப்ரல் 7-ம் சீனாவில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் மலேசியாவிலும் இந்த ரெட்மி நோட் 9எஸ் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் ரூ.11,190-விலையில் விற்பனைக்கு வரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 9எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.67 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2400 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாதனம்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட் வசதி உடன் அட்ரினோ 618ஜபியு ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்

ரெட்மி நோட் 9எஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் வசதி மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி நோட் 9எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ராடு வைடு ஆங்கிள் லென்ஸ் +5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 25எம்பி செல்பீ கேமரா, கைரேகை சென்சார் மற்றும் இன்ஃராரெட் சென்சார் உள்ளிட்ட ஆதரவுகளுடன் இந்த சசாதனம் வெளிவந்துள்ளது.

ரெட்மி நோட் 9எஸ் ஸ்மார்ட்போனில் 5020எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 18வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. இன்டர்ஸ்டெல்லர் கிரே, அரோரா ப்ளூ மற்றும் க்ளேஸீயர் ஒயிட் என்ற விருப்பங்களில் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான சாதனம்.

ரெட்மி நோட் 9எஸ் ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்டிஇ, 3 ஜிஇ வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப் சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!