தேவையான
பொருள்கள்:
பிரட்
துண்டுகள் - 4
குடமிளகாய்
- பாதி
பட்டர்
- 25 கிராம்
பூண்டு
பற்கள் - 2
மிளகாய்
தூள் - 1/2 மேஜைக்கரண்டி
காஷ்மீரி
மிளகாய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி
தக்காளி
சாஸ் - 1 மேஜைக்கரண்டி
உப்பு
- சிறிது
கொத்தமல்லிதழை
- சிறிது
தாளிக்க
தேவையான பொருட்கள்:
எண்ணெய்
- 3 மேஜைக்கரண்டி
பெரிய
வெங்காயம் – 1
செய்முறை:
வெங்காயத்தை
நீள வாக்கில் நறுக்கி கொள்ளவேண்டும். குடமிளகாயை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
பூண்டுப்பற்களை ஒன்றிரெண்டாக தட்டி வைத்துக்கொள்ளவும்.
அடுப்பில்
கடாய் வைத்து பிரட்டை சுற்றிலும் பட்டர் ஊற்றி பிரட்டில் தேய்த்து விடவும். பிறகு
மறுபுறம் திருப்பி போட்டு சுற்றிலும் பட்டரை ஊற்றி பிரட் மேலும் தேய்த்து
டோஸ்ட் பண்ணிக்கொள்ளவும். பிறகு சிறிய துண்டுகளாக கட் பண்ணிக்கொள்ளவும்.
அடுப்பில்
கடாயை வைத்து எண்ணெய் சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு அதோடு
சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தட்டி வைத்துள்ள
பூண்டுப்பற்கள், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு
அதனுடன் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தக்காளி சாஸ் சேர்த்து ஒரு நிமிடம்
கிளறி அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்க்கவும். பிறகு அதனுடன் பிரட் துண்டுகளை
சேர்த்து நன்றாக கிளறி இறுதியில் கொத்தமல்லிதழையை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
சுவையான பிரெட் சில்லி தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக