Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 6 மார்ச், 2020

கரு கலைந்து அதிக ரத்தப்போக்கு!… ஒரு வயது குழந்தையுடன் தீயிட்டு தற்கொலை

 

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் சத்ய நாராயணன், மொபைல் ஷோரூம் ஊழியரான இவருக்கு லதா என்ற மனைவியும், நிக்திஷா என்ற ஒரு வயது குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் லதா இரண்டாவதாக கருவுற்ற நிலையில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கரு கலைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் சிகிச்சை முடிந்தும் வீடு திரும்பியுள்ளார், வீட்டுக்கு வந்ததும் மீண்டும் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.இதனையடுத்து மதியம் 1 மணியளவில் கதவை பூட்டிய லதா, மண்ணெண்ணைய் ஊற்றி தீ பற்ற வைத்துக் கொண்டார்.

புகை சூழ்ந்தவுடன் உடனடியாக ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.லதா சடலமாக கிடந்த நிலையில், தீக்காயத்துடன் போராடிக் கொண்டிருந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தும் பலனில்லாமல் போனது.இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக