Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 6 மார்ச், 2020

மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் இந்த மாதிரியான அறிகுறிகள் தோன்றுமாம்


 Image result for மாரடைப்பு
மாரடைப்பு என்பது மற்ற நோய்களைப் போல எந்த அறிகுறியும் இல்லாமல் திடீரென வருவது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மாரடைப்பும் சில அறிகுறிகளை நம்மிடம் காட்டிவிட்டு தான் வரும். அவை என்னென்ன என்பது குறித்து இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.
மாரடைப்பு
ற்போதைய வாழ்க்கை முறை மாற்றங்களால் மாரடைப்பு என்ற பாதிப்பு நம்மில் பெரும்பாலனவரை பாதித்து வருகிறது. காரணம் உணவுப் பழக்க வழக்கங்கள், உட்கார்ந்தே இடத்திலேயே வேலை செய்வது, பாஸ்ட் புட், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் சாப்பிடுவது, போதிய உடற்பயிற்சியின்மை இவற்றால் 20 வயதிலேயே மாரடைப்பை சந்திக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 70 லட்சத்திற்கு மேல் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றன. இந்த மாரடைப்பால் நிறைய பேர்கள் உயிரிழக்கவும் செய்கிறார்கள். இவ்வளவு மருத்துவ தொழில் நுட்பம் வளர்ச்சி பெற்றும் ஏன் உயிரிழப்பு ஏற்படுகிறது என்றால் இது ஒரு சைலண்ட் கில்லராக இருப்பது தான். பல பேருக்கு மாரடைப்பின் அறிகுறிகளே தெரிவதில்லை.
எச்சரிக்கை அவசியம்

அப்படியே தெரிந்தும் பல பேர்கள் இதை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். அரசாங்கமும் இது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு செய்ய முயற்சிக்கிறார்கள். இதய ஆரோக்கியத்திற்காக செப்டம்பர் 29 ஆம் தேதியை உலக இதய தினமாகவும் கொண்டாடி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். மாரடைப்பு வராமல் தடுக்க வேண்டும் என்றால் அதைப்பற்றி முதலில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அதன் அறிகுறிகள், எதனால் ஏற்படுகிறது இது போன்ற தகவல்களை அறிந்து செயல்படுவது மாரடைப்பால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க வழி வகுக்கும்.
நீங்கள் அறிகுறிகளை அறிந்து வைத்திருக்கும் போது முன்னரே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற ஏதுவாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மாரடைப்பு எச்சரிக்கை

கீழ்க்கண்ட மாரடைப்பு அறிகுறிகள் தென்பட்டால் நீங்கள் காத்திருக்காதீர்கள். உடனே முதலுதவியை நாடுவது நல்லது. நெஞ்சில் திடீர் வலி அல்லது அசெளகரியம் தென்பட்டால் உடனே அவசர எண் 911 ஐ அழைத்து உதவி கேளுங்கள்.
அறிகுறிகள்
மார்பில் அசெளகரியம் தென்படும். மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்னால் சில நிமிடங்கள் நடு நெஞ்சில் வலி உண்டாகும். மார்பில் அழுத்தம், கணத்தில், வலி நேரலாம். அதே போல் கை, முதுகு, தாடை மற்றும் வயிற்றிலும் வலி அல்லது அசெளகரியத்தை உணர்வீர்கள்.
மூச்சு விட சிரமம்

மார்பில் வலி இல்லாமல் கூட மூச்சு விட சிரமம் உண்டாகும். வியர்த்தல், குமட்டல் அல்லது லேசான தலைவலி ஏற்படலாம். பெண்களுக்கும் ஆண்களுக்கும் அறிகுறிகள் வித்தியாசமானது மாரடைப்பில் ஏற்படும் நெஞ்சு வலி ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான தாக இருக்கும். ஆனால் பெண்கள் மற்ற அறிகுறிகளையும் காண்கிறார்கள். மூச்சு விட சிரமம், குமட்டல், வாந்தி, தாடை மற்றும் முதுகு வலி போன்ற அறிகுறிகளை ஆண்களை விட அதிகமாக காண்கின்றனர்.
அவசர எண் 911 ஐ அழையுங்கள்

மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பு நிமிடங்களில் ஏற்படுகிறது. மருத்துவர்கள் சொல்வார்கள் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்திருந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று அதனால் நிமிடங்கள் அவசியம். எனவே உங்களுக்கு அசெளகரியம் தென்பட்டால் உடனே911 ஐ அழுத்தி உதவி கேளுங்கள். இது சிகிச்சைக்கான விரைவான வழியாகும்.
இதன் மூலம் உங்களுக்கு அவசர மருத்துவ குழு உங்களைத் தேடி வந்து முதலுதவி செய்வார்கள். சீக்கிரமே உங்களை மருத்துவனையில் சேர்க்க உதவி செய்வார்கள். மாரடைப்பால் இதயம் செயலிழப்பு ஏற்பட்டால் அதற்கு சிகச்சை அளிக்க இந்த குழுவிற்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கும். இதனால் இந்த மருத்துவ நண்பர்கள் உங்கள் உயிரை காக்க உதவி செய்வார்கள். எனவே அவசரத்திற்கு அவசர உதவியை அணுகுங்கள்.
குமட்டல், வாந்தி

குமட்டல், அஜீரணம், நெஞ்செரிச்சல் அல்லது வயிற்று வலி உண்டாகுதல்
மாரடைப்பு ஏற்படும் போது பெண்கள் பொதுவாக இந்த அறிகுறிகளைக் கூறுகிறார்கள். வயிற்றில் அசெளகரியம் ஏற்படுதல், சில பேருக்கு வாந்தி கூட நேரிடுகிறது. எனவே குமட்டல், வாந்தி, மார்பில் அசெளகரியம் தென்பட்டால் மருத்துவரை அணுக முற்படுங்கள்.
வலி அப்படியே கைகளுக்கு பரவும்
மாரடைப்பு வலி உடலின் இடது பக்கமாக ஏற்படும். மேலும் நெஞ்சில் ஏற்படும் வலி அப்படியே கைகளுக்கு பரவி வலிக்கும் என்று மருத்துவர் சேம்பர்ஸ் கூறுகிறார். சில பேருக்கு கைவலி இருந்து கொண்டே வந்து பிறகு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
மயக்கம் அல்லது தலைவலி உண்டாகுதல்

மாரடைப்பு ஏற்படும் போது நீங்கள் உங்க சமநிலையை இழக்க நேரிடலாம். இதனால் மயக்கம் போட வாய்ப்புள்ளது. நீங்கள் சாப்பிடாமல் இருந்தாலோ, வேகமாக எழுந்து நிற்பதாலோ இப்படி நேரிடலாம். இதயம் நின்று விடுவதால் இரத்த ஓட்டம் குறைந்து இரத்த அழுத்தமும் குறைய ஆரம்பித்து விடும். இதனால் மயக்கம் உண்டாக வாய்ப்புள்ளது. லேசான தலைவலி தலைசுற்றல் இருக்கலாம் என்று மருத்துவர் புஃபாலினோ கூறுகிறார்.
தொண்டை மற்றும் தாடையில் வலி

பொதுவாக நமக்கு சலதோஷம் பிடிக்கும் சமயங்களிலும் தொண்டை மற்றும் தாடைகளில் வலி உண்டாகும். ஆனால் மாரடைப்பின் போது நெஞ்சில் ஏற்படும் வலி அப்படியே தாடை, தொண்டை வரை தாக்கத்தை ஏற்படுத்தும். இது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். எனவே அந்த மாதிரி இருந்தால் அவசர எண்ணை அழையுங்கள். தொண்டைவலி வந்தால் ஏதோ ஜலதோஷம் பிரச்சினை என்று மட்டும் நினைத்து அஜாக்கிரதையாக விட்டுவிடாதீர்கள்.
இருமல் இருக்கும்
உங்களுக்கு நீண்ட நாட்கள் தொடர்ச்சியான இருமல் இருந்தால் இதயம் தொடர்பான நோய் இருக்க வாய்ப்புள்ளது. இருமலின் போது இரத்தத்துடன் சளி வெளியேறுதல் இரத்தம் இதயத்திற்கு போக முடியாமல் நுரையீரலில் கசிவதால் ஏற்படலாம். எனவே நாள்பட்ட இருமல் இருப்பவர்கள் ஒரு முறை மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.
களைப்பு தென்படுதல்

படிக்கட்டுகளில் ஏறும் போது, காரில் இருந்து மளிகை பொருட்களை தூக்கிச் செல்வது போன்ற செயல்கள் உங்களுக்கு முன்னாளில் களைப்பை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் திடீரென்று இந்த செயல்களை செய்யும் போது உடனே மூச்சு இரைப்பது, களைப்பாக உணர்ந்தீர்கள் என்றால் மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்ளுங்கள். பலவீனம், அதிக சோர்வு இதய நோயின் அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது என்று புஃபாலினோ கூறுகிறார்.
குறட்டை விடுதல்
தூங்கும் போது லேசான குறட்டை விடுவது பொதுவான து. அதுவே உரத்த குறட்டை மூச்சுத்திணறலின் அறிகுறியாக இருக்கலாம். இதனால் சுவாசம் சீராக இல்லாமல் இதயத்திற்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே குறட்டை இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள். சுவாசத்தை சீராக்க நீங்கள் சுவாச கருவிகளை(CPAP) பயன்படுத்திக் கொள்ளலாம்.
வியர்த்தல்
மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் உடம்பு சில்லென்று ஆகி வியர்த்து போக ஆரம்பிக்கும். எனவே இந்த மாதிரியான சமயங்களில் நீங்களே காரை ஓட்டி மருத்துவமனைக்கு செல்ல முயற்சிக்காதீர்கள்.அது ஆபத்தில் முடியக் கூடும். உடனே 911 யை அழைத்து உதவி பெறுங்கள்.
கால், பாதம் மட்டும் முழங்கால் வீங்கிப் போதல்

கால், பாதங்கள், முழங்கால் வீங்கிப் போதலும் இதயம் செயல்படாத தன்மையை காக்கிறது. இதயத்தால் இரத்தத்தை பம்ப் செய்ய முடியாததால் இரத்தம் இரத்த குழாய்களுக்கே திரும்ப செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் வீக்கம் உண்டாகிறது. மேலும் இதயம் செயலிழப்பு ஏற்பட்டால் சிறுநீரகத்தின் வழியாக நீர்ச்சத்து, சோடியம் போன்ற நச்சுத்தன்மை வெளியேறுவது தடைபடுகிறது. இதனாலும் பாதங்களில் நீர்த்தேக்கம் உண்டாகும்.
ஒழுங்கற்ற இதயத் துடிப்பு

நாம் பொதுவாக பதட்டமாக இருக்கும் போது இதயம் வேகமாக துடிக்கும் இது இயல்பான ஒன்று. ஆனால் சில நொடிகளுக்கு மேல் உங்கள் இதயம் வேகமாக ஒழுங்கற்ற முறையில் துடித்தாலோ அடிக்கடி இது நேர்ந்தாலோ இதய மருத்துவரை அணுகுங்கள். மேலும் அதிகமான காஃபைன், போதுமான தூக்கம் இல்லாதது கூட இந்த பிரச்சினைகளை உண்டாக்கும் என்று புஃபாலினோ கூறுகிறார்.இப்படி இதயம் ஒழுங்கற்று துடிப்பதற்கு ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் எனப்படும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள். மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகி உடனே சிகிச்சை பெறுவது உங்கள் உயிரை நீங்கள் காத்துக் கொள்ள உதவியாக இருக்கும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக