Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 6 மார்ச், 2020

அந்த விஷயத்தில் ஆண்கள் பலவீனமா இருந்தா இந்த உணவுகளை கொடுங்க...


 https://static.langimg.com/thumb/msid-74187927,width-630,resizemode-4,imgsize-136236/74187927.jpg
ரோக்கியம் என்றாலே பெண்களுக்கு மட்டும் தானா.. ஆண்களுக்கும் உண்டு. ஆண்களும் அவர்களுக்கு தேவையான ஊட் டச்சத்தை நிறைவாக பெற்றால் இல்வாழ்க்கையும் ஆரோக்கியமும் சிறக்கும் அதற்கு சாப்பிட வேண்டிய உணவுகள் என் னென்ன, இதை குறித்து பார்க்கலாமா?
சத்து அவசியம்
பெண்கள் மட்டும் அல்லாமல் ஆண்களுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு நேர்வது உண்டு. இருவருக்கும் தேவையான சத்துகள் பொதுவானது என்றாலும் கூட சில வகை உணவு களை ஆண்கள் அதிகம் சேர்த்துகொள்வது அவசியமாகும். பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொழுப்பு குறைந்த பால் பொருள்கள், இறைச்சிகள் என்று சத்து நிறைந்த உணவை பட்டியலிட்டு இருவருமே எடுத்துகொண்டாலும் கூட ஆண்களது உணவு முறையில் மேலும் பல பொருள்களை தனித்துவமாக சேர்ப்பது நல்லது.

பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்களில் வேறுபாடு வரும்போது ஆரோக்கிய குறை பாட்டை உண்டாக்கிவிடும் என்பது போன்று ஆண்களுக்கென்றே பிரத்யேகமான டெஸ் டோஸ்டிரான் ஹார்மோன் குறையும் போது அவை முக்கியமான பிரச்சனையில் கொண்டு விடும். இதனால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாத அளவுக்கு இருக்கும்.

ஆண்கள் ஆரோக்கியமாக இருந்தால் இல்லற வாழ்க்கையில் இருவருக்குமே போதுமான இன்பம் கிட்டும் என்பதால் ஆண்களின் ஆரோக்கியத்திலும் அவர்களது உணவிலும் கவனம் செலுத்துவது நல்லது

காஃபி
காலையில் எழுந்ததும் தரமான காஃபியோடு நாளை தொடங்குங்கள். காஃபி உடலுக்கு நல்லதல்ல. அது இதயத்தை பலவீனமாக்கும் என்றெல்லாம் கூறிவந்த ஆய்வுகள் கூட தற்போது இதை ஆரோக்கிய பானமாக ஒப்புகொண்டுள்ளது.

தினமும் இரண்டு கப் முதல் நான்கு கப் வரை காஃபி குடிப்பது உங்கள் ஆயுளை நீட்டிக்க உதவும். சரும பிரச்சனைகள் சொரியாசிஸ், டைப் -2 சர்க்கரை, மாரடைப்பு, கீல்வாதம், பக்கவாதம் போன்றவற்றை குறைப்பதில் சிறிதளவேனும் துணைபுரிகிறது. காஃபி குடிப்பவர்களுக்கு புற்றுநோய் உண்டாகும் என்று சொல்லப்பட்ட ஆய்வுகளும் திரும்ப பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதை உலக சுகாதார நிறுவனமும் ஒப்புகொண் டுள்ளது என்பதால் நாளை ஒரு கப் காஃபியோடு உற்சாகமாக தொடங்குங்கள்.

பால் மற்றும் தயிர் போன்றவற்றில் ஈடுபாடு இருந்தாலும் அதிகமாகாமல் பார்த்துகொள்ளுங்கள். கால்சியம் ஆண்களுக்கு அதிகம் தேவைப்படுவதில்லை. அதிகப்படியான கால்சியம் தீங்கையே தரும் என்பதால் அதிகளவு பால் எடுத்துகொள்வதையும் தவிர்த்துவிடுங்கள்.
பச்சை இலை, காய்கறிகள்

பச்சை இலை காய்கறிகள் அதிகம் எடுத்துகொள்வது உங்களை எப்போதும் சுறுசுறுப் பாக வைத்திருக்க உதவும். குறிப்பாக கீரைகள், கேல் கீரை, சார்டு எனப்படும் வெளி நாட்டில் கிடைக்கும் கீரை வகைகள் ஆண்களுக்கு அதிகப்படியான ஊட்டச்சத்தை அளிப்பவை. இதில் இருக்கும் லுய்டின் மற்றும் ஜியாக்ஸாந்தின் என்னும் ஆன் டி ஆக்ஸி டெண்ட்கள் அதிகமாக உள்ளது. இவை ஆண்களின் பார்வை திறனை பாதுகாக்க உதவு வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

குறிப்பாக ப்ரக்கோலி , பசலைக்கீரையை அதிகம் சேர்த்துவருவது நல்லது. இதனால் இரும்புச்சத்தும், வைட்டன்மின் கே பற்றாக்குறையும் உருவாகாது. ஹீமோகுளோபின் பிரச்சனையும் இருக்காது. ப்ரக்கோலி வைட்டமின் சி இருப்பாதால் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பச்சை இலை காய்கறிகள் உள்ள பீட்டா கரோட்டின் சத்து கண்பார்வையை மேம்படுத்துவதோடு கண் புரையையும் தடுக்க உதவுகிறது.
ஆரஞ்சு வண்ண காய்கறிகள்

காய்கறிகள் எல்லாமே சத்து மிக்கவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சத்துகளை கொண்டிருப்பவை. அதனால் ஒரேவிதமான காய்கறிகளை எடுத்துகொள்வதை விட எல்லா காய்களும் சேர்ந்து சாலட் ஆக எடுத்துகொள்வதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையான பைட்டோ கெமிக்கல்கள் கிடைக்கும்.

வண்ணங்களுக்கேற்ப இதில் வெவ்வேறு பைட்டோ கெமிக்கல்கள் உண்டு. ஆரஞ்சு நிறமுள்ள கேரட், சர்க்கரை வள்ளிகிழங்கு, பூசணிக்காய், ஆரஞ்சு நிற குடைமிளகாய் போன்ற காய்கறிகளை கண்டிப்பாக சேர்த்துகொள்ளுங்கள். இதில் பைட்டோ கெமிக்கல்கள், வைட்டமின் சி, லுடீன் மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை நிறைந்திருக்கின்றன. இவை புரோஸ்டேட் பிரச்சனை வராமல் தடுக்கிறது என்பதை ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

எலும்புகளை வலிமைபடுத்தும் ஜிங்க் சத்து பூசணியில் உண்டு. அதே போன்று இதன் விதைகளிலும் நார்ச்சத்தும், ஆன் டி ஆக்ஸிடெண்ட்களும் நிறைந்துள்ளது. தற்போது பூசணி விதைகள் தனியாக பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
ரெட் மீட் எனப்படும் சிவப்பு நிற இறைச்சி

பெண்களை விட ஆண்கள் அதிகளவு புரதம் எடுத்துகொள்கிறார்கள். புரதம் அளவு அதி கரிப்பது நன்மையே. இது ஆண்களின் உடலை கட்டுகோப்பாக வைப்பதோடு கலோரி களை எரிக்கவும் பயன்படுகிறது. சிவப்பு இறைச்சியில் கார்னிடைன் என்னும் அமினோ அமிலம், புரதம், இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது.

குறிப்பாக மாடு மற்றும் பன்றிக் கறி என்று சொல்லலாம். இதற்காக அதிக அளவு எடுத்து கொள்வதும் கேடானது என்பதை யும் தெரிந்துகொள்ள வேண்டும். அதே போன்று தின மும் ஒரு முட்டை சாப்பிடுவதும் இதயத்துக்கு ஆரோக்கியமானது என்கிறார்கள்.
கடல் வாழ் உயிரினங்கள்

துத்தநாக சத்து ஆண்களுக்கு தேவையான ஒன்று. விந்தணுக்களின் எண்ணைக்கையை அதிகரிக்க இவை தேவைப்படுகிறது. மேலும் புரொஸ்டேட் வீக்கத்தை கட்டுப்படுத்துகி றது. மேலும் புரோஸ்டேட் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பும் குறைவாக இருப்பதால் துத்தநாகம் கண்டிப்பாக தேவை இருக்கிறது.

ஷெல் பிஷ் எனப்படும் மட்டி எனப்படும் (கிளிஞ்சல் போன்று) மீன் வகையில் துத்தநாகம் சத்து அபரிமிதமாக காணப்படுகிறது. மேலும் இவற்றோடு இறால் மற்றூம் நண்டுகள் எடுத்துகொள்ளலாம். இது குறைந்த கொழுப்பு, கலோரிகளை கொண்டிருப்பதோடு அதிக அளவு புரதமும் கொண்டிருக்கிறது.
டோஃபு மற்றும் சோயா பீன்ஸ்

சோயாவில் லிருக்கும் ஐசோஃப்ளோவன்கள் ஆண்களுக்கு விரைப்பை புற்றுநோய் உரு வாவதை தடுக்கிறது. சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் டோஃபு புரோஸ்டேட் புற்று நோயை தடுக்க உதவுகிறது என்பதை கண்டறிந்துள்ளது. சோயாவில் இருக்கும் அதிகப் படியான பைட்டோ ஏஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாற்றங்களை உண்டாக்கி விறைப்பு தன்மையை மாற்றத்தை உண்டாக்கும் என்கிறார்கள். ஆனால் ஆய்வின் படி சோயா ஆன்களுக்கு விறைப்பு தன்மையில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என் கிறது.
இஞ்சி

தினமும் ஒரு டீஸ்பூன் இஞ்சி சாறு அல்லது இஞ்சி கலந்த நீரை பருகுவது நல்லது. தினமும் காலையில் எழும் போதே உடல் சோர்வு இருந்தாலோ அல்லது உடல் பயிற்சி செய்த பிறகு தசைகளில் வலி இருந்தாலோ உங்கள் சோர்வை விரட்டி அடிக்க விரும்பினால் இஞ்சி அதிக பலனளிக்கும்.

இஞ்சி சிறந்த வலி நிவாரணி மட்டுமல்ல வலியை போக்குவதிலும் 40% வரை துணைபுரி வதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கீல் வாதம் மற்றும் புராஸ்டேட் புற்றுநோய்க்கும் எதிரானது. எப்போதாவது சோர்வு அல்லது தசைகள் பிடிப்பு உடலில் வலு குறைந்தாற் போன்று உணர்ந்தால் இஞ்சியை தட்டி ஒரு தம்ளர் நீரில் கொதிக்கவிட்டு தேன் சேர்த்து பருகுங்கள். யானை பலம் வந்தது போல் உணர்வீர்கள்.
வாழைப்பழம்

பழங்களில் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது உங்கள் உடலில் பொட்டாசியம் அளவை கூட்ட உதவும். உங்கள் எலும்புகளையும் , தசைகளையும் வலுப்படுத்தவும் உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் சோடியத்தை குறைத்து பொட்டாசி யத்தை கூட்ட வேண்டுமெனில் தினம் ஒரு வாழைப்பழம் போதுமானது.
தக்காளி

தக்காளியில் இருக்கும் லைகோபீன் ஆண்களுக்கு உண்டாகும் புற்றுநோயை தடுக்க உதவுவதாக இருக்கிறது. இதற்குரிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந் தாலும் எல்லா ஆய்வுகளும் தக்காளியை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு புராஸ்டேட் புற்று வருவதற்கான வாய்ப்பு குறைவு என்பதை ஒப்பு கொண்டுள்ளது. இது குறித்து 5 இலட்சம் ஆண்களை ஆய்வுக்கு உட்படுத்தியது. அதில் லைக்கோபின் அதிகம் எடுத்து கொண்டவர்களுக்கு இந்த அபாயம் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் இந்த லைகோபின் இதய நொய் வராமலும் தடுக்கிறது. இதய தமனிகளில் வீக்கம் வரமல் உதவுகிறது. எனினும் இது குறித்த ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
டார்க் சாக்லெட்

இனிப்பு சுவையுள்ள சாக்லெட் ஆனது எல்லோருக்கும் எல்லா வயதினருக்கும் பிடித்த மானது. ஆண்கள் மிதமான அளவு சாக்லெட் உண்பது அவர்கள் ஆரோக்கியத்தை மேன் மைப்படுத்தவே செய்யும். இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும், கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றவும் உதவும் . அதே நேரம் சாக்லெட் அதிகமாக எடுத்துகொள்ள வேண்டும் என்ற அர்த்தம் இல்லை. மிதமான அளவில் அவ்வபோது கறுப்பு நிற சாக்லெட்-ஐயும் சுவைக்க பழகுங்கள்.
செர்ரி

செர்ரி பழங்களை சுவைக்காதவர்களே இல்லை. இனிப்புகளில் அலங்காரத்துக்கும் பயன்படும் செர்ரி பழத்தின் நிறத்தாலேயே பலரும் விரும்புகிறார்கள்.இதன் நிறத்தில் ஆந்தோசயின்கள் உண்டு. இவை உடல் உறுப்புகளை அழற்சியில் இருந்து காக்கிறது.

புளிப்பு மற்றும் இனிப்பு நிறைந்த செர்ரி பழங்கள் கீல்வாதம் என்னும் நோயை வராமல் காப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. தினமும் 10 செர்ரி பழங்கள் வாழ்நாளில் கீல்வாதம் என்னும் பிரச்சனையை உண்டாக்காது என்றும் கூறுகிறது. பெண்களை விட ஆண்களே அதிகம் இந்த நோயால் பாதிப்பதால் செர்ரி பழங்களை அன்றாடம் சாப்பிடுவது நல்லது.
ப்ளூ பெர்ரி

இதயத்துக்கு நல்லது செய்வதில் மிக முக்கியமானது இந்த ப்ளூ பெர்ரி. இதில் வைட்ட மின் கே நிறைந்திருக்கிறது. இது இரத்த உறைவுக்கு உதவுகிறது. ஆய்வு ஒன்றில் ஆண் களுக்கு உண்டாகும் விறைப்புத்தன்மை பிரச்சனையை தவிர்க்கவும் உதவுவதாக கண்ட றிந்துள்ளது.

ஆய்வு ஒன்றில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களை பற்றி கூறும் போது அதிக அளவு ஃப்ளவனாய்டு நிறைந்த உணவுகளை சாப்பிட்டவர்களுக்கு விறைப்பு தன்மை பாதிப்பு குறைவாக இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
பிஸ்தா

உலர் பருப்புகள் எப்போதும் உடலுக்கு நன்மை தரும் என்றாலும் அதில் ஒன்றான பிஸ்தா பருப்பை தினம் ஒரு கைப்பிடி எடுத்துகொள்ளுங்கள்.கொழுப்பை குறைக்க உதவும் சிறந்த பொருளாக அதை சொல்லலாம். இவை புரதம், துத்தநாகம், நார்ச்சத்தை அதிகளவு உடலுக்கு தருகிறது.இதே போன்று பாதாமும் எடுத்துகொள்ளலாம்.
ஆண் உறுப்பு விறைப்பு பிரச்சனை வராமல் இருக்கவும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் இல்லற வாழ்வில் சிறப்பாக ஈடுபடவும் துணைபுரிகிறது. தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்சனையில்லாமல் இருக்க தினம் ஒரு கைப்பிடி பிஸ்தா போதுமானது.
மேற்கண்ட பொருள்கள் எல்லாமே ஆண்களின் ஆரோக்கியத்துக்கு அதிகமாக பயன் படக்கூடியவை. என்னதான் சத்து மிகுந்த உணவை திட்டமிட்டு எடுத்துகொண்டாலும் ஆண்களின் உடலுக்கேற்ப அவர்களது தனித்தன்மையான சில உறுப்புகளின் பாது காப்பும் முக்கியம். அந்த வகையில் சில வகை உணவுகளை கண்டிப்பாக எடுத்து கொள்வது ஆரோக்கியத்துக்கு நல்லது என்பதால் உங்கள் அன்றாட வாழ்வில் இந்த உணவு பொருள்களும் இடம்பிடிக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக