பொருட்களை அதிக விலைக்கு விற்பவர்களின் கடையின் உரிமம் ரத்து என்று புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும், மால்கள், திரையரங்குகள் மட்டுமின்றி நாட்டின் எல்லைகளும், மாநில மற்றும் மாவட்ட எல்லைகளும் தற்போது மூடப்பட்டுள்ளன.வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு (144தடை) அமல்படுத்தப்பட்டுள்ளது இதனால், பெரிய நகரங்களில் மக்களின் நடமாட்டமும் வெகுவாக குறைந்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில்,மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பிறபுளிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை 85 சதவீத மக்கள் மட்டுமே கடைபிடிக்கின்றனர். மீதமுள்ள 15 சதவீத மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பவர்களின் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். பொதுமக்கள் கடைகளுக்கு கூட்டமாக செல்வதை தவிர்க்க வேண்டும்.வங்கி கடனுக்கான தவணை மூன்று மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது அனைத்து தரப்பினருக்கும் மிகுந்த பயன் அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக