>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 4 மார்ச், 2020

    இப்படி வாழ பழகிக்கொண்டால் போதும்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!


    படித்ததில் பிடித்தது... ரசித்தது...!!

    வசதி இல்லாதவன் ஆடு மேய்க்கிறான்...
    வசதி இருக்கிறவன் நாய் மேய்க்கிறான்...
    என்னதான் நாம வேலை வெட்டி இல்லாம இருந்தாலும்,
    நமக்கு நாமே போன் பண்ணும்போது பிஸின்னுதான் வரும்...😂😂
    -------------------------------------------------------------------------------------------------------
    எல்லாம் நன்மைக்கே...!!         
    பல்லவ நாட்டை இராஜவர்மன் என்ற அரசர் ஆண்டு வந்தான். அந்நாட்டு அமைச்சர் எப்பொழுதும் எது நடந்தாலும் வருத்தப்படாமல் எல்லாம் நன்மைக்கே... என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் அரசரும், அமைச்சரும் பேசிக் கொண்டிருந்தபொழுது அரசர் மாம்பழம் ஒன்றை கத்தியால் வெட்டிக் கொண்டிருந்தார்.

    அப்பொழுது தவறுதலாக கத்தி அரசனின் சுண்டு விரலை வெட்டிவிட்டது. வலி தாங்க முடியாமல் அரசர் துடித்தார். அந்தசமயம் வழக்கம்போல் அமைச்சர், அரசே! எல்லாம் நன்மைக்கே! என்றார். இதைக் கேட்ட அரசர் நான் விரல் வெட்டுப்பட்டு துடிக்கிறேன். நீர் எல்லாம் நன்மைக்கே என்று சொல்கிறாயா? என்று கோபத்துடன் கத்தினார்.

    உடனே, காவலர்களிடம்! அமைச்சரை சிறையில் கொண்டு போய் அடையுங்கள் என்று உத்தரவிட்டார். காவலர்களும் அமைச்சரை சிறையில் அடைத்தனர். அப்போதும் அமைச்சர், எல்லாம் நன்மைக்கே... என்று கூறினார். நாட்கள் பல கடந்து சென்றது.

    வேட்டையாடுவதில் ஆர்வமுடைய அரசர் ஒரு நாள் தனியாக காட்டிற்கு சென்றார். அப்போது அங்கே மலைவாசிகள் காளிக்கு பலி கொடுப்பதற்காக ஒருவனைத் தேடிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அரசர் அவர்களிடம் சிக்கிக் கொண்டார்.

    அங்கு இருந்த கோவில் பூசாரி அரசரை முழுமையாகச் சோதித்து பார்த்தார். பின்பு, காளிக்கு எந்தக் குறையுமில்லாதவர்களை மட்டுமே பலியிட முடியும். இவனுக்கோ சுண்டு விரல் பாதியாக வெட்டுப்பட்டுள்ளது. அதனால் இவனை விட்டு விடுவோம் என்று கூறி அரசரை விடுவித்தார்கள்.

    அரசர்! அரண்மனைக்கு வந்ததும் உடனடியாக அமைச்சரை விடுவிக்க உத்தரவிட்டார். நடந்ததை எல்லாம் அமைச்சரிடம் கூறினார். சுண்டு விரல் வெட்டுப்பட்டதால் உயிர் பிழைத்தேன். அன்று எல்லாம் நன்மைக்கே...! என்று நீர் சொல்லியதன் உண்மையை உணர்ந்தேன் என்றார்.

    அதற்கு அமைச்சரும், அரசே என்னை நீங்கள் சிறையில் அடைத்ததும் நன்மைக்கே. அரசர் அமைச்சரிடம் எப்படி சொல்கிறாய் என்று கேட்டார். அதற்கு அமைச்சர், எப்பொழுதும் உங்களை பிரியாமலிருக்கும் என்னை சிறையிலடைக்காமல் இருந்திருந்தால் உங்களுடன் காட்டிற்கு வந்திருப்பேன். அந்த மலைவாசிகள் எந்த குறையும் இல்லாத என்னை பலியிட்டு இருப்பார்கள். நீங்கள் என்னை சிறையில் அடைத்ததால் நான் உயிர் பிழைத்தேன் என்றார்.

    நீதி :

    எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்று நினைத்து வாழ பழகிக்கொள்ள வேண்டும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக