Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 13 மார்ச், 2020

தாராள பிரபு விமர்சனம் சினிமா விமர்சனம்





நடிகர்கள் ஹரிஷ் கல்யாண்,விவேக்,தான்யா ஹோப்


இயக்கம் கிருஷ்ணா மாரிமுத்து
சினிமா வகை Comedy
கால அளவு:122

விந்தணு தானத்தை மையமாக வைத்து இந்தியில் வெளியான விக்கி டோனர் படத்தின் தமிழ் ரீமேக்கே தாராள பிரபு. விந்தணு தானம் பற்றிய படத்தை தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் ரீமேக் செய்வது சாதாரண விஷயம் அல்ல. அந்த வகையில் சிறப்பாக ரீமேக் செய்த இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்துவுக்கு பாராட்டுக்கள்.

பாரிஸ் கார்னரில் செயற்கை கருத்தரிப்பு மையம் நடத்தி வருகிறார் கண்ணதாசன்(விவேக்). அவர் தன்னை தேடி வரும் தம்பதிகளுக்கு விந்தணு தானம் செய்ய ஒரு ஆரோக்கியமான இளைஞரை தேடி அலைகிறார். அப்பொழுது தான் அவர் பிரபுவை(ஹரிஷ் கல்யாண்) சந்திக்கிறார். அம்மா, பாட்டியுடன் வசித்து வரும் பிரபுவுக்கு கால்பந்தாட்டம் தான் உலகம்.

கண்ணதாசன் பிரபுவை விந்தணு தானம் செய்யுமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்த அவர் மறுக்கிறார். ஆனால் பிரபுவின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு விஷயத்தால் கண்ணதாசனின் கோரிக்கையை ஏற்கிறார். அதன் பிறகு கண்ணதாசனின் பிசினஸ் வேற லெவலில் நடக்கிறது.

இந்நிலையில் பிரபுவுக்கு நிதி(தான்யா ஹோப்) மீது காதல் ஏற்பட்டு, திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். ஒரு வழியாக பெற்றோரை சமாதானம் செய்து திருமணம் செய்கிறார்கள். ஆனால் அடிக்கடி விந்தணு தானம் செய்வதால் பிரபுவுக்கும், நிதிக்கும் இடையேயான உறவு முறியும் நிலைக்கு வருகிறது. அதன் பிறகு நடந்தது என்ன என்பதே கதை.

ஹரிஷ் கல்யாண் பிரபுவாக அருமையாக நடித்துள்ளார். தான்யா ஹோப் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆனால் பல இடங்களில் விவேக் தான் ரசிகர்களை கவர்கிறார். நகைச்சுவை செய்ய அவருக்கு சொல்லியா கொடுக்க வேண்டும். அனுபமா, சச்சு ஆகியோரின் நடிப்பும் சிறப்பு.

செல்வகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு பக்கபலமாக அமைந்துள்ளது. இரண்டாவது பாதியில் வரும் சில காட்சிகள் மெதுவாக இருப்பது மைனஸ். பிஜிஎம் மற்றும் எமோஷனல் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் தாராள பிரபு அருமையான ரீமேக்காக இருந்திருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக