இந்திய மருத்துவ ஆய்வுக்குழுவின் தலைமை இயக்குநர் திரு. பல்ராம் பார்கவா அவர்கள், கோரோனா வைரஸ் சந்தேக நோயாளிகள் மற்றும் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதாரப் பணியாளர்கள் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் என்ற மருந்தை எடுத்துக் கொள்ள பரிந்துரை மேற்கொண்டார்.
இதற்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமைக் கட்டுப்பாட்டாளர் அலுவலகமும் அனுமதியளித்தது. அவசரச் சூழ்நிலைகளில் மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டுக்கு இந்த மருந்தினை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
இதனையடுத்து இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து மற்றும் இதிலிருந்து தயாரிக்கப்படும் மற்ற மருந்துகளின் ஏற்றுமதிக்கு தற்போது இந்திய அரசு தற்போது தடை விதித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக