Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 11 மார்ச், 2020

விடுவிக்கக்கோரி நளினி தொடர்ந்த வழக்கு -தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்


 Image result for விடுவிக்கக்கோரி நளினி தொடர்ந்த வழக்கு -தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
ளினி தாக்கல் செய்த  மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
 ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.

அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கு இடையில்   7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால் இந்த தீர்மானத்துக்கு  தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி  கொலை வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.அப்பொழுது நளினியின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!