புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் 7 சீட்டர் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு
கொண்டுவரப்பட்ட ஃபோக்ஸ்வேகன்
டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி கார் ரூ. 33.12 லட்சம் அறிமுக விலையில் விற்பனைக்கு
கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்படி, முந்தைய டிகுவான் காரை விட தற்போதைய மாடல் ரூ. 4.98 லட்சம் விலை உயர்வு பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விலை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, முந்தைய டிகுவான் காரை விட தற்போதைய மாடல் ரூ. 4.98 லட்சம் விலை உயர்வு பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விலை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஆல்ஸ்பேஸ் காரில் கூடுதல் இருக்கை வரிசை, பிஎஸ்-6 விதிகளுக்குட்பட்ட பெட்ரோல் எஞ்சின் போன்ற புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சிபியூ பிளாட்பாரமில் தயாராகும் இந்த காருக்கு புக்கிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த காரை அறிமுகம் செய்து வைத்து பேசிய ஃபோக்ஸ்வேகன் பயணிகள் ரக கார் பிரிவில் இயக்குநர் செடஃபென் கினாப், உலகளவில் டிகுவான் ஆல்ஸ்பேஸ் காருக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. தற்போது இந்த காரை இந்தியாவில் அறிமுகம் செய்து வைத்திப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். மிகவும் ப்ரீமியமான, அதிக இடவசதி கொண்ட, பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வசதிகளுடன், சிறப்பான செயல்பாடுகளை வழங்கக்கூடிய காராக டிகுவான் 7 சீட்டர் ஆல்ஸ்பேஸ் கார் தயாராகியுள்ளது.
இந்த காரில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்சின் உள்ளது. இது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி 4 மோஷன் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காரை ஓட்டுவதற்கு எளிதாக இருக்கும், மேலும், அதிக எரிவாயு சிக்கனத்தை இந்த மாடல் வழங்கும். நிச்சயமாக இந்திய வாடிக்கையாளர்களை டிகுவான் 7 சீட்டர் கார் பெரிதும் கவரும் என்று அவர் தெரிவித்தார்.
தற்போது விற்பனையிலுள்ள டிகுவான் மாடலை பின்பற்றியே இந்த 7 சீட்டர் மாடல் தயாராகியுள்ளது. ஆனால் இந்த இரண்டு மாடல்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆல்ஸ்பேஸ் காரில் புதிய டிசைனுடன் கூடிய பம்பர், கிளாஸியான கருப்பு நிற பின்பக்க ஸ்பாய்லர், ரிவைஸ்டு பின்பக்க பம்பர், இரட்டை புகைப்போக்கி குழாய் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும், தற்போதைய மாடலைக் காட்டிலும் இப்புதிய கார் நீளமாக உள்ளது. காரினுடைய சாளரம், பக்கவாட்டு மோல்டிங் ஆகியவற்றில் குரோம் வேலைப்பாடுகள் உள்ளன. மேலும் 18 அங்குல அலாய் சக்கரங்கள், இல்லுமினேடட் ஸ்கெஃப் பிளேட்டுகள் உள்ளன. இதனுடைய பூட் ஸ்பேஸ் 340 லிட்டர். இதை 1,274 லிட்டர் வரை பெருக்கிக் கொள்ளலாம் என்பது கவனிக்கத்தக்கது.
ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேக்ஸ் காரில் அகலமான இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், ட்ரை-சோன் ஆட்டோமேட்டிக் ஏசி, பனரோமிக் சன்ரூஃப், பார்க் அசிஸ்ட் சிஸ்டம், வியென்னா லெதர் இருக்கை கவர்கள், ஏழு ஏர்பேகுகள், மின்சாரத்தால் இயங்கும் வாகன கட்டுப்பாட்டு கருவி, ஏபிஎஸ். இபிடி, ரிவெர்ஸ் பார்க்கிங் கேமரா, டயரில் காற்றழுத்தத்தை கண்காணிக்கும் கருவி, ஹில் டீசன்ட் கன்ட்ரோல் சிஸ்டம் போன்ற சிறப்பம்சங்கள் இந்த காரில் உள்ளன.
புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் காரில் பிஎஸ்-6 விதிகளுக்குட்பட்ட 2.0 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்சின் உள்ளது. இது 187 பிஎச்பி பவர் மற்றும் 320 என்.எம் டார்க் திறனை வழங்கும். இந்த எஞ்சின் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும் இது 4 மோஷன் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டத்தில் இயங்கக்கூடியது. சிறப்பாக டிரைவிங் அனுபவத்தை வழங்கும் பேடில் ஷிஃப்டெர்கள் உள்ளன.
ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் 7 சீட்டர் கார் பெட்ரோலியம் ப்ளூ, பைரிட் சில்வர், ஃப்யூர் வொயிட், ரூபி ரெட், ஹேபனெர்னோ ஆரஞ்சு, டீப் பிளாக் பியர்ல், பிளாட்டினம் கிரே உள்ளிட்ட 7 வண்ணத் தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக