எல்லாருக்கும் தொப்பையை குறைப்பது
என்பது பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. மாங்கு மாங்குனு உடற்பயிற்சி செய்தால் கூட
இந்த தொப்பை என்பது குறைந்த பாடில்லை என்கின்றனர் பலர். ஆனால் உங்க தொப்பையில் 7 நாட்களில்
வியத்தகு மாற்றத்தை கொண்டு வர முடியும் என்கிறோம் நாங்கள்.
உங்க திருமண விழாக்கள், பிரண்ட்ஸ் பார்ட்டிக்கு என்று எடுத்த
ஆடைகள் உங்களுக்கு பிட்டாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் உங்க ஆடைகள் உங்களுக்கு
கச்சிதமாக பொருந்த உங்களுக்கு இது ஒரு சந்தர்ப்பம்.
இந்த டயட் திட்டம் எளிதான ஒன்று மட்டும் மல்ல உங்களுக்கு ஏற்றதும்
கூட என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். சரி வாங்க உங்க வயிற்றை குறைக்க நீங்கள்
எந்த மாதிரியான டிப்ஸ்களை ப்லோ செய்யலாம் என்று பார்ப்போம்.
இந்த உணவுகள் வேண்டாம்
நீங்களே தயாராகுங்கள்
அடிக்கடி பசிக்குது பசிக்குது என்று நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதும் உங்க தொப்பை அதிகரிக்க ஒரு காரணமாகிறது. எனவே நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதை குறையுங்கள். உங்களை கட்டுப்பாட்டில் வைக்க முற்படுங்கள். வாரத்திற்கு ஒரு முறை மட்டும் க்ரீமி பாஸ்தா, சாக்லேட் போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இது உங்க உடல் மெட்டா பாலிசத்தை அதிகரிக்கும்.
மீன் எண்ணெய் மாத்திரைகளை சாப்பிடுங்கள்
காலை உணவை தவிர்க்காதீர்கள்
காலை உணவு என்பது நமது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று. ஏனெனில் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், ஆற்றல் எல்லாம் காலை உணவில் இருந்து கிடைக்கப்பெறுகிறது. எனவே எழுந்த ஒரு மணி நேரத்தில் காலை உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி கொள்ளும்.
8 மணிக்குள் சாப்பாடு
செயற்கை பானங்களுக்கு பை பை சொல்லுங்கள்
இப்பொழுது எல்லாம் கார்பனேட்டேடு பானங்களை குடிப்பது பேஷனாகி வருகிறது. இவற்றில் சேர்க்கப்படும் அதிகப்படியான சர்க்கரை உங்க கொழுப்பை அதிகரிக்க மட்டுமே உதவுகிறது. இதற்கு பதிலாக க்ரீன் டீ, ஜூஸ்கள் போன்ற இயற்கை பானங்களை குடியுங்கள்.
பச்சை காய்கறிகள் வேண்டாம்
காய்கறிகள் உடலுக்கு எப்போதும் சிறந்தது தான். ஆனால் பச்சை காய்கறிகளைச் சாப்பிடும் போது எளிதில் சீரணிக்காது. எனவே பச்சையாக காய்கறிகளை தவிர்த்து வேக வைத்த காய்கறிகளை பயன்படுத்தி சீரணிப்பு பெறுங்கள். வெறுமனே காய்கறிகளை வேகவைத்து, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடுங்கள்.உப்பைத் தவிருங்கள்
நாம் உணவில் சேர்க்கும் உப்பு தண்ணீரை ஈர்க்கும் பொருள் என்பதால் நீர்த்தேக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நீர்த்தேக்கம் கொழுப்பு படி தலையும் உண்டாக்குகிறது. எனவே தேவையில்லாத பதப்படுத்தப்பட்ட உப்பு சேர்த்த உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது.
புரோபயாடிக் உணவுகள்
அதிகமாக நீர் ஆகாரங்கள் குடியுங்கள்
நீர் நமது உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்து. இது வயிறு வீக்கம் போன்றவற்றை போக்குகிறது. உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்கிறது. எனவே தினமும் 8 டம்ளர் தண்ணீராவது குடித்து வர வேண்டும்.
எதையாவது மெல்ல வேண்டாம்
கார்போஹைட்ரேட் உணவுகள்
நம் தசைகளில் கிளைக்கோஜென் என்ற பொருள் சேமித்து வைக்கப்படுகிறது. இதைத் தான் நமது உடல் தேவைப்படும் நேரங்களில் ஆற்றலாக பயன்படுகிறது. எனவே கார்போஹைட்ரேட் உணவை நீங்கள் எடுத்துக் கொள்ளாத போது இந்த ஆற்றலையே அது பயன்படுத்தி தேவையற்ற கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. எனவே உங்க மதிய உணவிற்கு பிறகு குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
நார்ச்சத்து உணவுகள்
நார்ச்சத்துள்ள உணவுகள் செரிமானம் அடைவதற்கு சற்று அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும். அது உங்களுக்கு தேவையில்லாமல் பசி எடுப்பதைக் கட்டுப்படுத்தும். அதனால் அதிக கலோரிகள் எடுத்துக் கொள்வது தவிர்க்கப்படும்.
தொப்பையை குறைக்க டயட் திட்டம் : நாள் 1
காலை ஸ்நாக்ஸ் : 100 கிராம் சிக்கன் மற்றும் 1/2 சிவப்பு மிளகாய் நறுக்கியது.
மதியம் : க்ரில்டு சிக்கன் நெஞ்சுக்கறி, சாலட் இலைகள், சிவப்பு மிளகாய், பச்சை பீன்ஸ், 1/4 டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில்
மதிய ஸ்நாக்ஸ் : 100 கிராம் டர்கி மீன் உடன் 1/4 பங்கு வெள்ளரிக்காய் சேர்த்து சாப்பிடுங்கள்
இரவு : 100 கிராம் க்ரில்டு சிக்கன் மற்றும் வேக வைத்த ப்ரக்கோலி.
நாள் 2
காலை ஸ்நாக்ஸ் : 100 கிராம் மீன் இறைச்சி, 1/2 பச்சை மிளகாய் நறுக்கியது
மதியம் : வேக வைத்த மீன் மற்றும் க்ரீன் சாலட், 1/2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்
மதிய ஸ்நாக்ஸ்
100 கிராம் டர்கி உடன் 75 கிராம் வேக வைத்த பிரக்கோலி .
இரவு
1 சால்மன் மீன், வெந்தய இலைகள் மற்றும் வேகவைத்த பீன்ஸ்
நாள் 3
100 கி சுட்ட சால்மன் மீன் மற்றும் கீரை
காலை நேர ஸ்நாக்ஸ் :
100 கி சிக்கன் உடன் 1/2 மஞ்சள் பச்சை மிளகாய் நறுக்கியது
மதியம் :
1 க்ரில்டு சிக்கன் மற்றும் சாலட் 1/2 டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில்
மதிய ஸ்நாக்ஸ்
100 கிராம் டர்க்கி துண்டுகளுடன் 1/4 அவகேடா பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
இரவு
க்ரில்டு ஆட்டிறைச்சியுடன் வேக வைத்த ப்ரக்கோலி மற்றும் கீரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
நாள் 4
முட்டை துருவல் (முழு முட்டை அல்லது 2 வெள்ளைக்கரு), தக்காளி, பீன்ஸ் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள்
காலை ஸ்நாக்ஸ்
100 கிராம் டர்கி துண்டுகளுடன் 1/4 வெள்ளரிக்காய் நறுக்கியது
மதிய உணவு :
பேக்கிடு காட் வகை மீன் உடன் சாலட், தக்காளி, கீரை மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்
மதிய ஸ்நாக்ஸ் : 100 கிராம் சிக்கன் மற்றும் 1/2 நறுக்கிய வெள்ளரிக்காய்
இரவு உணவு :
1/2 டீ ஸ்பூன் ஆயிலுடன், பச்சை காய்கறிகள் சேர்த்து 100 கிராம் சிக்கன் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.
நாள் 5
200 கிராம் டர்கி மீனுடன் 1/4 அவகேடா மற்றும் 1/4 வெள்ளரிக்காய் நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்
காலை ஸ்நாக்ஸ்
2 வேக வைத்த முட்டை 1/2 சிவப்பு மிளகாய் நறுக்கி சேர்த்து எடுத்து கொள்ளுங்கள்.
மதியம்
150 கிராம் க்ரில்டு பிரான் உடன் பச்சை காய்கறிகள் சாலட், தக்காளி மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.
மதிய ஸ்நாக்ஸ்
100 கி டர்கி மீனுடன் 5 பாதாம் பருப்பு சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள்
இரவு
100 கி சிக்கன் மற்றும் வேக வைத்த ப்ரக்கோலி சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.
நாள் 6
காலை1 க்ரில்டு மீனுடன் வறுத்த மிளகு மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.
காலை ஸ்நாக்ஸ்
100 கிராம் வேக வைத்த சிக்கன் மற்றும் 1 தக்காளி நறுக்கியது சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள்
மதியம்
150 கிராம் டர்கி உடன் பச்சை காய்கறிகள் சாலட், வேக வைத்த ப்ரக்கோலி, 1/2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்,
மதிய உணவு ஸ்நாக்ஸ்
100 கி சிக்கன் மற்றும் 5 பீகான் நட்ஸ் சேர்த்து சாப்பிடுங்கள்.
இரவு உணவு
150 கி - 200 கி வேக வைத்த பச்சை பீன்ஸ் மற்றும் பிரக்கோலி சேர்த்து எடுத்து கொள்ளுங்கள்.
நாள் 7
3 வெள்ளைக்கரு ஆம்லெட், தக்காளி நறுக்கியது மற்றும் வேகவைத்த கீரை இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
காலை ஸ்நாக்ஸ்
100 கிராம் டர்க்கி மீனுடன் 5 பிரேசில் நட்ஸ் வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்
மதிய உணவு:150 கிராம் வேக வைத்த சிக்கன் மற்றும் அஸ்பாரகஸ், பச்சை காய்கறிகள் சாலட் இவைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
மதிய ஸ்நாக்ஸ்
100 கி டர்கி மீனுடன் 1/4 வெள்ளரிக்காய் சேர்த்து நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
இரவு உணவு :
க்ரில்டு வாத்து கறி வேக வைத்தது, பச்சை காய்கறிகள் அல்லது பிராக்கோலி சேர்த்து சாப்பிடுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக